2008-06-20
குசேலன் பற்றி தெரிஞ்சிக்கோங்க..! சிறப்பு கட்டுரை
தசாவதாரம் படத்தின் பரபரப்பு அடங்குதற்குள் தமிழ் ரசிகர்களை குசேலன் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என்றாலே அந்த படத்துக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? பரபரப்பு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
சரி.. விஷயத்துக்கு வருவோம். குசேலன் படத்தை பற்றிய இதுவரை வெளிவந்த மற்றும் வெளிவராத தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பது போலவே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குசேலன் படத்தைப் பற்றி ஏதாவது புதிய தகவல் கிடைக்காதா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்.
* கடந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம்தான் தமிழில் குசேலன் என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
* மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்தவர் மம்முட்டி. அதே கேரக்டரில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
* இந்த படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு குசேலனுக்கு முதலில் குசேலடு என்று பெயரிட்டனர். அந்த பெயரை இப்போது கதாநாயகடு என்று மாற்றியுள்ளனர்.
* இந்த படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார் என்பது தெரிந்த சங்கதிதான். நயன்தாராவும் இந்த படத்தில் ஒரு நடிகையாகவே நடித்துள்ளார் என்பது புது தகவல்.
* படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பசுபதி நடிக்கிறார். வெயி்ல் படத்தில் பசுபதியின் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்தான் குசேலனில் பசுபதி நடிக்க சிபாரிசு செய்தார்.
* ரஜினிகாந்தின் கிராமத்து தோழராக நடித்துள்ள பசுபதியின் மனைவியாக நடிகை மீனா நடித்திருக்கிறார். மலையாளத்திலும் மீனா இதே கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சந்திரமுகி படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு விரும்பியதன் விளைவுதான் குசேலன் உருவாக ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுதவிர ரஜினியின் குரு டைரக்டர் பாலசந்தரும் விரும்பி கேட்டுக் கொண்டதும் குசேலன் உருவாக காரணமாகும்.
* குசேலன் டைரக்டர் பி.வாசு இயக்கும் 55வது படம்.
* குசேலன் சூட்டிங் இதுவரை மொத்தம் 82 நாட்கள் நடந்துள்ளன. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. அந்த பாடலும் விரைவில் படமாக்கப்படவுள்ளது.
* தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற உலக நாயகனே பாடலைப்போலவே குசேலனில் இடம்பெறும் சினிமா... சினிமா... சினிமாதான்... எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் வந்ததிந்த சினிமாதான்...! என்ற பாடல் பட்டையை கிளப்பும் என்கிறார் டைரக்டர் பி.வாசு.
* இந்த பாடலை சூப்பர் ஸ்டாருக்காகவே ஸ்பெஷலாக எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
* இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்.
* இந்த பாடல் 75 ஆண்டு தமிழ்சினிமா வரலாற்றை திரும்பிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்படவிருக்கிறதாம்.
* குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது.
* படத்தில் சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்தை விட இளமையாக தோன்றுகிறார். குசேலன் படத்தின் ஸ்டில்களே அதற்கு சாட்சி.
* குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, பாத்திமா பாபு, தியாகு, கீதா, சோனா, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் பி.வாசுவும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.
* நடிகர் திலகம் பிரபு, விஜயகுமார், மதன்பாப், நிழல்கள் ரவி, சினேகா, குஷ்பு, த்ரிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். அதாவது கால்ஷீட் கேட்பது, சூட்டிங்கில் பங்கேற்பது போன்ற காட்சிகளில் இவர்கள் தோன்றுகிறார்கள்.
* குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 30ம் தேதி வெளியிடப்படுகிறது.
* ஜுலை மாத இறுதியில் குசேலன் படம் ரீலிஸ் ஆகும் என்று டைரக்டர் பி.வாசு அறிவித்துள்ளார். ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
குசேலன் சினிமா குறித்த சிறப்பு கட்டுரை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!
சூப்பர் பதிவு நிருபரே....:)
தலைவர் செய்தியை கலக்கலாக தரும் நிருபருக்கு ஒரு "ஓ" போடுங்க :-)))
வலைப்பதிவில் நிறுவனம் சாராத அன்றாடம் திரைப்பதிவு இல்லை. அது உங்கள் பதிவு மூலம் நிறைவேறுகிறது.
பாராட்டுக்கள் !
//உலக நாயகனே பாடலைப்போலவே குசேலனில் இடம்பெறும் சினிமா... சினிமா... சினிமாதான்... எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் வந்ததிந்த சினிமாதான்...! என்ற பாடல் பட்டையை கிளப்பும் //
ஐயோ... ஆசையை தூண்டுறீங்களே நிருபர். posted by குசேலன் வருகைக்காக காத்திருப்போர் சங்கம்.
//கிரி said...
தலைவர் செய்தியை கலக்கலாக தரும் நிருபருக்கு ஒரு "ஓ" போடுங்க :-)))//
ஒண்ணு என்ன ஒன்பது ஓ போட்டுருவோம்... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
OOOOOOOOOO OOOOOOOO OOOOOOO OOOOOOO POTHUMA O Pottathu
எல்லா தகவல்களும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் !
நீங்கள் யாருக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//கிரி said...
தலைவர் செய்தியை கலக்கலாக தரும் நிருபருக்கு ஒரு "ஓ" போடுங்க :-)))//
எனக்கு ஓ போட்ட கிரிக்கு நன்றி...!
//நடிகர் திலகம் பிரபு//
இவர் எப்போது நடிகர் திலகமானார்??
//ARUVAI BASKAR said...
எல்லா தகவல்களும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் !
நீங்கள் யாருக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன்//
நண்பர் அருவை பாஸ்கர்...
நான் இப்போது எந்த பத்திரிகையில் வேலை பார்க்கிறேன் என்று இங்கே தெரிவிக்க இயலாது. SORRY. பின்னொரு நாளில் தனி மடலில் தெரிவிக்கிறேன்.
ஆமாம்... தாங்கள் இப்போது வேலூரிலா இருக்கிறீர்கள்? அடிக்கடி காந்தி ரோடு செல்வதுண்டா...? என்னுடைய முதல் பத்திரிகைப்பணி அனுபவம் வேலூரில்தான் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.
//கோவி.கண்ணன் said...
வலைப்பதிவில் நிறுவனம் சாராத அன்றாடம் திரைப்பதிவு இல்லை. அது உங்கள் பதிவு மூலம் நிறைவேறுகிறது.
பாராட்டுக்கள் !//
நன்றி கோவி.கண்ணன்.
விரிவான தகவல்களுக்கு நன்றி. பிற நடிகர்களின் புதிய திரைப்படங்கள் பற்றியும் இது போன்ற செய்திகளை அவ்வப்போது எழுதுங்கள்.
//இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்.//
பி.வாசுவுக்கு 'ஓம் ஷாந்தி ஓம்' படத்தில வேற என்னல்லாம் பிடிச்சிருக்காம்?
//சிந்தாநதி said...
விரிவான தகவல்களுக்கு நன்றி. பிற நடிகர்களின் புதிய திரைப்படங்கள் பற்றியும் இது போன்ற செய்திகளை அவ்வப்போது எழுதுங்கள்//
நன்றி சிந்தாநதி...!
//ஐயோ... ஆசையை தூண்டுறீங்களே நிருபர். posted by குசேலன் வருகைக்காக காத்திருப்போர் சங்கம்.//
ரீப்பீட்டேடேடேடேடேடேய்..........................................................
//இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்//
என்ன இது நிருபரே/?
//Anonymous said...
//இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்//
என்ன இது நிருபரே/?//
இந்த கட்டுரை எழுதும்போது குசேலனில் விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக இருந்தது.
சிறப்பான கட்டுரைதான். புதிய தகவல்களையும் சேர்ந்து புதிதாக ஒரு சிறப்பு கட்டுரை வெளியிடுங்கள் நிருபர்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!