2008-06-19
ரஜனியை கவர்ந்த தசாவதாரம் கேரக்டர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் நடித்ததில் பலராம் நாயுடு கேரக்டர்தான் பிடித்ததாம்.
தசாவதாரம் சிறப்பு காட்சியை பார்த்த உடனேயே கமல்ஹாசனை கட்டியணைத்து வாழ்த்து கூறியவர்களில் முதல்வராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். அப்படி சந்தித்தபோது ஒரு ரசிகர் தசாவதாரம் படம் பற்றி ரஜினியிடம் கேட்டுள்ளார். அவருக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தசாவதாரம் படம் கமல்ஹாசன் பண்ணிருக்கார். அந்த படத்துல நடிக்க என்னை கூப்டிருந்தா நான் போயிருக்க மாட்டேன். ஏன்னா கமல் மாதிரி வெரைட்டியா நம்மால நடிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். தசாவதாரம் படத்துல கமல் பத்து வேஷம் போட்டிருந்தாஞம் எனக்கு பிடிச்சது பலராம் நாயுடு கேரக்டர்தான், என்று கூறியுள்ளார்.
எந்தவித ஈகோவும் இல்லாமல் கமல்ஹாசனை, ரஜினிகாந்த் பாராட்டியது செய்திதான் இன்றைய கோலிவுட்டின் பரபரப்பு செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
எனக்கும் பலராம் நாயுடு கேரக்டர்தான் பிடிச்சிருக்கு நிருபர்
எனக்கு பூவராகவன் கரெக்டர் தான் பிடிச்சிருக்கு
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!