2008-06-16
மாளவிகாவுக்கு மிரட்டல் : பரபரப்பு புகார்
பணத்துக்காக நடிகை மாளவிகாவை மிரட்டிய மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா. தனது இளமைத் துள்ளலான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் இழுத்து வைத்திருக்கிறார். திருட்டுப்பயலே படத்தில் மாளவிகாவின் அசத்தலான நடிப்பு தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. அவர் குத்தாட்டம் போட்ட வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... பாடல் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமன் என்பவரை காதலித்து திருமணம் செய்த மாளவிகா தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தை பிறக்கும் வரை தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியிருக்க முடிவு செய்துள்ள மாளவிகா மும்பையில் கணவருடன் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை மாளவிகா தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், எனது மேனேஜர் முனுசாமி என்னை பணத்துக்காக ஏமாற்றி மோசடி செய்து விட்டார். அவருக்கு எனது சம்பளத்தில் இருந்து 7 சதவீதம் கமிஷன் என்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் கடைசியாக நான் நடித்த படமான சிங்கக் குட்டி படத்துக்கு நான் வாங்கிய ரூ.4 லட்சம் சம்பளத்தில் ரூ.1 லட்சத்தை கமிஷனாக எடுத்துக் கொண்டார். இதுபற்றி கேட்டால், ஒவ்வொரு படத்திலும் இப்படித்தான் எடுத்து வருகிறேன். நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் உன்னை சினிமாவில் நடிக்க விடாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனு பற்றிய விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி மாளவிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேனேஜர் முனுசாமி என் பணத்தை அபகரித்ததுடன், என்னையே மிரட்டுகிறார். அதனால் அவர் மீது புகார் செய்துள்ளேன், என்றார்.
கொசுறு தகவல் : மாளவிகாவின் வயிற்றில் வளரும் ஜுனியரும் நன்றாக இருக்கிறதாம். இரு தினங்களுக்கு முன்புதான் டாக்டரிடம் செக்கப்புக்கு சென்றதாக கூறினார் மாளவிகா.
Labels:
Malavika
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
யோவ்! யாருயா முனுசாமி..உங்க வீட்டுக்கு ஆட்டோ வருனுமா? என்ன தைரியம் இருந்தா ஒன்றும் தெரியாத!!!!!!! எங்க தலைவியை ஏமாற்றி இருப்ப...
//இதுபற்றி மாளவிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேனேஜர் முனுசாமி என் பணத்தை அபகரித்ததுடன், என்னையே மிரட்டுகிறார். அதனால் அவர் மீது புகார் செய்துள்ளேன், என்றார்//
ஆஹா நிருபரே! தலைவி கூட பேசினேன்னு வேற என் வயித்தெரிச்சலை கிளப்புறீங்களே :-((((
பின்னூட்டத்துக்கு நன்றி கிரி...!
//யோவ்! யாருயா முனுசாமி..உங்க வீட்டுக்கு ஆட்டோ வருனுமா?//
முனுசாமி சென்னையை சேர்ந்தவர்தானாம்.
//ஒன்றும் தெரியாத!!!!!!! எங்க தலைவியை///
அப்படியா...? சொல்லவே இல்ல...!
//தலைவி கூட பேசினேன்னு வேற என் வயித்தெரிச்சலை கிளப்புறீங்களே//
வாஸ்தவம்தான் கிரி... ஆனா இதுல இருக்குற கஷ்டம் என்னைப் போன்ற நிருபருக்குத்தான் தெரியும். இந்த சினிமாக்காரர்கள் (ஒரு சிலரைத் தவிர) பண்ற பந்தா இருக்கே... அப்பபப்பா... அனுபவிச்சாத்தான் உங்களுக்கெல்லாம் தெரியும்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!