2008-06-15
பசுபதிக்கு மனைவியாக நடிக்கிறார் சிம்ரன்
ஒரு காலத்தில் காமெடி நடிகர்களுடன் வரும் காட்சிகளில் கூட நடிக்க மறுத்த நடிகை சிம்ரன், குணச்சித்திர நடிகர் பசுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வெயில் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகர்கள் பட்டியிலில் இடம் பிடித்தார் நடிகர் பசுபதி. இவரது நடிப்பை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் குசேலனில் நடிக்க வாய்ப்பை பெற்றுத் தந்தார். தற்போது குசேலன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் பசுபதி ஈடுபட்டு வருகிறார். குசேலனுக்கு பிறகு அவர் இந்தியில் மெகா ஹிட் படமான டாக்ஸி நம்பர் 1911 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். ஜி.வி. பிலிம்ஸ் தயாரிப்பில், டைரக்டர் லட்சுமிகாந்த் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடிக்க நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அஞ்சாதே படத்தில் நடித்த அஜ்மலும் படத்தில் நடிக்கிறார். பசுபதி ஓட்டும் டாக்ஸியின் முதலாளியின் மகளாக, பெரும் பணக்கார வீட்டு பெண்ணாக அஜ்மல் தோன்றுகிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பக்கா ஹோம்லியாக நடித்து பெயர் வாங்கிய மீனாட்சி, பசுபதியை விரட்டி விரட்டி காதலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார்.
நடிகை மீனாட்சி தற்போது சுந்தர்சியுடன் நடிக்கும் பெருமாள் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது கொசுறு தகவல்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் குறித்த உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!
Nirubar, before publishing anything, just read twice, we appreciate your hard work in bringing hot news to your readers, at the same time you have to be alertive when you post the news,
here you make ajmal, as a girl, read the content once again to find out the error.
keep up the good work,nand, dubai.
nand1972@gmail.com
//we appreciate your hard work in bringing hot news to your readers//
THANK YOU MR.NANDHA KUMAR
சிம்ரன் இப்ப எங்க மாவட்டத்துலதான வே நடிச்சிக்கிட்டு இருக்கு. சேவலுன்னு ஒரு படத்துல, பரத்துக்கு அக்காவா சிம்ரன் நடிக்காவலாம்ல.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!