2008-06-13
குடிபோதை கேள்வியால் நிருபரை தாக்கிய நடிகர்
பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது தனக்கு பிடிக்காத ஒரு கேள்வியை கேட்டதால் நடிகர் ஒருவர் டி.வி. நிருபரை தாக்கினார். இதனால் அந்த பிரஸ்மீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் வினோத் கண்ணா. இவரது மகன் அக்ஷய் கண்ணாவும் சினிமா உலகில் நுழைந்து நடித்து வருகிறார். தற்போது அவர் மேரே பாப் பெஹ்லே ஆப் என்ற இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. அப்போது புதுப்பட அறிவிப்பை தொடர்ந்து கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. பல பத்திரிகை, டி.வி. நிருபர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்டனர். டி.வி. நிருபர் ஒருவர், நீங்கள் மதுவுக்கு அடிமை என்று சொல்கிறார்களே... அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு அக்ஷய் குமார் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் மீண்டும் அந்த நிருபர் அதே கேள்வியை கேட்டார். இதில் கடுங்கோபமடைந்த அக்ஷய் குமார், நிருபரை கடுமையாக சாடிவிட்டு, மேஜையில் இருந்த மைக்கை தூக்கி நிருபர் மீது வீசினார். அதைத்தொடர்ந்து அந்த நிருபரை தனது கைகளால் தள்ளி விட்டார்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நிருபர்கள் அக்ஷய் கண்ணாவை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் அக்ஷய் மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது என்று கூறினார். பின்னர் பாதுகாவலர்கள் உதவியுடன் அக்ஷய் அங்கிருந்து வெளியேறி சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நிருபரை தாக்கிய நடிகர் அக்ஷய் கண்ணாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... வாசகர்களே... நீங்களும் உங்களது கண்டனத்தை பதிவு செய்யுங்களேன்.
//குடிபோதை கேள்வியால் நிருபரை தாக்கிய நடிகர்//
நிருபர்னு தலைப்பை படிச்சதும் உங்களைத்தான் அடிச்சிப்புட்டாங்களோன்னு நினைச்சுட்டேன் சினிமா நிருபரே.
நான் கண்டிக்கிறேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!