CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-09

நதியாவை தேடி வரும் ஹீரோயின் வாய்ப்பு



நடிகை நதியா வாய்ப்புகளை மறுத்து வருகிறார்... அதுவும் ஹீரோயின் வாய்ப்புகளை....

முன்னாள் நாயகியான சிம்ரன் போன்ற நடிகைகள் மீண்டும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வரும் நிலையில் நடிகை நதியா தன்னை தேடி வந்த கதாநாயகி வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் மெடி, சுடிதார் போன்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பட்டத்துடன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை வலம் வந்தவர் நடிகை நதியா. மாடர்ன் உடைகளை அணிந்து அவர் நடித்த அழகை மெச்சாதவர்களே இருக்க முடியாது.

வயது ஏறியதால் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலானார் நதியா. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் தலைகாட்ட ஆசைப்பட்ட நதியா தற்போது பல்வேறு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். தாமிபரணி, சண்டை ஆகிய படத்தில் நதியாவின் நடிப்பை பாராட்டியவர்களை விட அழகை பாராட்டியவர்களே அதிகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வயதானாலும் இளமை மாறாமல் தோற்றமளித்தார்.

அழகாக இருந்தால் தமிழ் சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? எங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று நதியாவுக்கு கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வந்து கொண்டே இருக்கிறதாம். ஆனால் நதியாவோ... எனக்கு வயதாகி விட்டது. இப்போது நான் கதாநாயகியாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்த ஹீரோயின் வாய்ப்புகளையெல்லாம் மறுத்து வருகிறாராம்.

தற்போது நதியா, பட்டாளம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளைத்தான் இங்கே ஸ்டில்களாக பார்க்கிறீர்கள்.

கொசுறு தகவல் : சினிமாவில் நடிப்பதற்காகவே நதியா தற்போது மும்பைக்கு வந்து செட்டிலாகி விட்டார். விரைவில் சென்னையில் வந்து குடியேற திட்டமிட்டிருக்கிறார்.

வாசகர்களே...! நடிகை நதியா கதாநாயகியாக நடிக்கலாமா? என்பதை பின்னூட்டமாக தெரிவியுங்களேன்.

2 comments:

கிரி said...

இளம்! அம்மாவா வேணா நடிக்கலாம் ...நம்மவங்க கிளுகிளுப்பா எதிர்பார்பாங்களே :-)))

முரளிகண்ணன் said...

கதை அவர் வயதை நியாயப்படுத்தினால் நடிக்கலாம்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!