2008-06-11
ஜூன் 25ம் தேதி குசேலன் ஆடியோ ரீலிஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 25ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று செய்திகள் வெளியாகியள்ளன. மலையாளத்தில் கத பறயும்போல் படத்தில் தமிழ் ரீமேக்தான் குசேலன் என்ற பெயரில் உருவாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேலு என்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
படத்தில் சூப்பர் ஸ்டார் தொடர்புடைய காட்சிகளின் சூட்டிங் கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து சூட்டோடு சூடாக டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மற்ற நடிகர்களும் தங்களது பங்கு பணிகளை ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள்.
குசேலன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே தயாராக இருக்கின்ற நிலையில் வரும் 25ம் தேதி ஆடியோ ரீலிஸ் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினம் இதனை உறுதி செய்ய முடியவில்லை. ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் குசேலன் ரீலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Labels:
Kuselan
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஹலோ சினிமா நிருபர்...
உங்களோட எழுத்துக்கள் ரசித்து படிக்கும்டியாய் இருக்கின்றன. புதிய இணையதளம் ஒன்று வருகிறது என்ற விளம்பர போர்டு வைத்திருக்கிறீர்கள். எப்போது அந்த தளம் வரும். புதிய தளத்தின் பெயர் என்ன? சினிமாநிருபர் டாட் காமா? நீங்கள் நிருபர் என்பதாலோ என்னவோ, உங்கள் வலைப்பூ செய்திகள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சூப்பர் செய்தி போங்க... ஆனா படம் தான் ஆகஸ்ட் னு இடிய இறக்கிட்டீங்களே :-((((
நான் தலைவர் படம் ஜூலை ல வந்துடும்னு ரொம்ப ஆவலா இருக்கேன் :-) உறுதி செய்து போடுங்க சினிமா நிருபர்
சொல்ல மறந்துட்டேன் மேலே தலைவர் படம் சும்மா நச்சுனு இருக்கு :-)
//senthil said...
ஹலோ சினிமா நிருபர்...
உங்களோட எழுத்துக்கள் ரசித்து படிக்கும்டியாய் இருக்கின்றன. புதிய இணையதளம் ஒன்று வருகிறது என்ற விளம்பர போர்டு வைத்திருக்கிறீர்கள். எப்போது அந்த தளம் வரும். புதிய தளத்தின் பெயர் என்ன? சினிமாநிருபர் டாட் காமா? நீங்கள் நிருபர் என்பதாலோ என்னவோ, உங்கள் வலைப்பூ செய்திகள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில் அவர்களே...!
புதிய தளம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அந்த தளம் உங்களது ஆவலை தீர்க்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தாருங்கள். புதிய தளத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
//நான் தலைவர் படம் ஜூலை ல வந்துடும்னு ரொம்ப ஆவலா இருக்கேன் :-) உறுதி செய்து போடுங்க சினிமா நிருபர்//
நன்றி கிரி...
நான் விசாரித்த வரை ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் குசேலன் வரும் என்கிறார்கள். உறுதியானதும் செய்தி வெளியிடுகிறேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!