2008-06-20
10 ஆயிரம் பேர் : இது சாதனையா?
நிருபர் வலைப்பூவில் தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை ரெகுலராக கொடுக்க தொடங்கி இன்றோடு 81 நாட்கள் ஆகின்றன. இந்த 81 நாட்களில் மொத்தம் 172 பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.15 மணிக்கு, //தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சினிமா செய்திகளை உடனுக்குடன் சுடச்சுட தரும் முயற்சியில் இந்த வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறேன். அடிக்கடி வந்து என்னை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்// என்ற முதல் பதிவுடன் எனது பதிவுலக வாழ்க்கை தொடங்கியது.
தினமும் நேரம் பாராமல் வேலையினிடையே கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எனக்கு கிடைக்கும் செய்திகளை வாசகர்களுக்கு கொடுத்து வருகிறேன். இது எனது 172வது பதிவு. எனது வலைப்பூவில் எழுதப்படும் செய்திகளை வந்து படித்த வாசகர்களின் எண்ணிக்கே நேற்று இரவோடு 10 ஆயிரத்தை தொட்டு விட்டது. இந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் எனது எழுத்துக்கள் அடங்கிய பக்கங்களை 39 ஆயிரத்து 400 முறை பார்த்து, படித்து சென்றிருக்கிறார்கள்.
ஒரு பத்திரிகை நிருபராக நான் எழுதும் செய்திகளை எத்தனையோ லட்சம் வாசகர்கள் படித்திருக்கிறார்கள். பிரபலமான பத்திரிகை என்பதால் எனது எழுத்துக்கள் எளிதில் வாசகர்களை சென்றடைகின்றன. ஆனால் பிரபலம் இல்லாத ஒரு பெயரில் நான் தொடங்கிய இந்த நிருபர் வலைப்பூவை இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேர்கள் வந்து நுகர்ந்து சென்றது ஒரு பெரிய சாதனையாகவே எனக்கு தோன்றுகிறது. எனது இந்த எண்ணம் சரியா? என்பதை எனது வாசகர்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்.
2007ம் ஆண்டு தொடக்கத்திலேயே நிருபர் என்ற பெயரில் வலைப்பூவை தொடங்கிய நான் அதற்கு பிறகு செய்திகளை முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. காரணம் வாசகர்கள் எவரும் எனது வலைப்பூவை நுகர வராததுதான். தமிழ்மணம், திரட்டி, தமிழ்கணிமை போன்ற திரட்டிகளைப் பற்றி அறிந்திருந்தும் அதில் எப்படி பதிவை இணைப்பது என்று தெரியாமல் இருந்தேன். (இன்றுவரை தேன்கூடு திரட்டியில் எனது பதிவை இணைக்க முடியவில்லை என்பது வேறு கதை) அந்த நேரத்தில் எனக்கு அறிமுகமாகிய நெல்லைதமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியர் நண்பர் மோகன்ராஜ் அவர்கள்தான் தமிழ்மணத்தில் இணைப்பது பற்றியும், அதனால் வரும் வாசகர்கள் பற்றியும் தெரிவித்து, தமிழ்மணத்தில் இணைக்க உதவினார். அவருக்கு இத்தருணத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து வலைப்பதிவு உலகில் எனக்கு அறிமுகமாகிய முதல் நண்பர் ஒருவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் கிரி. முதன் முதலாக எனக்கு பின்னூட்டம் அனுப்பியதுடன், என்னை ஊக்கப்படுத்தியதில் ஊக்கப்படுத்துவதில் அவரது பங்கு அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
அதேநேரத்தில் முரளிகண்ணன், அதிஷா, கீ&வென், மனதின் ஓசை, லேகா, மங்களூர் சிவா, டொன்லீ, ராப், கானா பிரபா, ச்சின்னபையன், பாண்டி பரணி, பினாத்தல் சுரேஷ் போன்ற பல வலைப்பதிவர்கள் (யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்) மற்றும் பெயரிடாத வாசகர்கள் எனது பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்து வருகிறார்கள். என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா நிருபரின் இந்த பயணம் வெற்றிப்பயணமா அல்லது வெற்றுப் பயணமா? என்பதை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...! மேலும் நிருபரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் வேறு விஷயங்கள் இருந்தாலும் பின்னூட்டமிடுங்கள். உங்கள் கருத்து எமது வளர்ச்சிக்கு படிக்கல்லாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை வாசகர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 81 நாட்களில் எனக்கு பின்னூட்டமாகவும், தனி மடலிலும் வந்த பாராட்டுக்களையெல்லாம் தொகுத்து ஒரு பதிவாக போட ஆசைப்படுகிறேன். நேரமின்மை காரணமாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//10 ஆயிரம் பேர் : இது சாதனையா?//
வாழ்த்துகள் !
உங்கள் சேவை தொரட்டும். வாழ்த்துகள் நிருபரே...:)
வாழ்த்துக்கள் நிருபரே :-)
//இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேர்கள் வந்து நுகர்ந்து சென்றது ஒரு பெரிய சாதனையாகவே எனக்கு தோன்றுகிறது. எனது இந்த எண்ணம் சரியா? என்பதை எனது வாசகர்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்//
பொதுவாக இணையத்தில் வலைப்பதிவுலகில் திரை சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் அந்த பதிவுக்கு ஹிட் அதிகமாகவே இருக்கும், பதிவர்கள் பொதுவாக திரை சம்பந்தப்பட்ட செய்திகள் யார் வெளியிடுகிறார்கள் என்பதை பார்ப்பதில்லை, தலைப்பு என்ன என்பதையே பெரும்பாலோனோர் காண்கிறார்கள். அதனால் நீங்கள் மற்ற பதிவர்களோடு உங்கள் வருகை எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். மற்றவர்களின் திரை துறை அல்லாத பொது பதிவுகளுக்கு ஒரு நாளைக்கு 100 வாசகர்கள் வருகிறார்கள் என்றால் உங்கள் பதிவுக்கு 300 ல இருந்து 400 வாசகர்கள் வருவார்கள் (அது நீங்கள் தினமும் இடும் பதிவுகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடவும் குறையவும் செய்யலாம்), எனவே வாசகர்கள் மற்றவர்களை விட நம் பதிவுக்கு அதிகம் வந்து விட்டார்கள் என்று ஒப்பிட்டு பார்க்காமல் இன்னும் பல நல்ல செய்திகளை நாகரீகமான முறையில் கூறி உங்கள் வாசகர்களை அதிகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் கூறியதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
//சினிமா நிருபரின் இந்த பயணம் வெற்றிப்பயணமா அல்லது வெற்றுப் பயணமா? என்பதை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...! //
சந்தேகமே வேண்டாம் வெற்றி பயணம் தான் :-)
உங்களுடைய டெம்ப்ளேட் அழகாக உள்ளது, படிப்பதற்கு எளிமையாகவும் பார்ப்பதற்கு சிக்கல் இல்லாமல் அழகாக இருக்கிறது, அதற்க்கு என் பாராட்டுக்கள்.
திரை உலக வலை பதிவு என்றாலும், அநாகரீகமான சொற்களை பயன்படுத்தாமல் மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் நாகரீகமான முறையில் உங்கள் செய்திகளை தரும் உங்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். நீங்கள் தொடர்ந்து இதை போல செய்திகளை கொடுத்து விரைவில் 100000 வாசகர்களை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
கிரி
//வாசகர்கள் மற்றவர்களை விட நம் பதிவுக்கு அதிகம் வந்து விட்டார்கள் என்று ஒப்பிட்டு பார்க்காமல் இன்னும் பல நல்ல செய்திகளை நாகரீகமான முறையில் கூறி உங்கள் வாசகர்களை அதிகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.//
கண்டிப்பாக கிரி...! இன்னும் நிறைய செய்திகளை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அதேநேரத்தில் இன்னொரு விஷயம். மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்காக நான் இந்த பதிவை பதிவிடவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவின் முக்கிய நோக்கமே வலைப்பதிவுலகில் நான் காலூன்ற உதவி புரிந்தவர்களுக்கு நன்றி சொல்வதற்காகத்தான். தலைப்பை கொஞ்சம் வித்தியாசமாக போட வேண்டும் என்பதால் இப்படியொரு தலைப்பை போட்டேன். தங்களது விரிவான வாழ்த்துகளுக்கு நன்றி!!
10000க்கு வாழ்த்துக்கள் நிருபரே
வாழ்த்துக்கள் நிருபரே...
அன்பு நிருபருக்கு,
உங்கள் சாதனைக்கு என் வாழ்த்துக்கள்.
ஆரியம் திராவிடம் பார்ப்பணியம், ஆணியம் பெண்ணியம், கம்யூனிசம் பாசிசம் ஆண்குறி கோணிப்பை, தேவையில்லா அரசியல் போன்ற அடிதடி கருமங்கள் நிறைந்த வலைப்பூ உலகில் இத்தகைய பொழுது போக்கு நிறைந்த வலைப்பூக்கள் எவ்வளவோ சிறந்தவை!!
வாழ்த்துக்கள்
உங்கள் சேவை சிறக்கட்டும்.
பரவாயில்லை நிருபரே... கலக்கிட்டு இருக்கீங்க..!
VERRY GOOD NIRUBAR. KEEP IT UP
எம்மை வாழ்த்திய இவன், சரவணகுமார், மெட்ராஸ்காரன் ஆகிய வலைபதிவர்களுக்கு நன்றிகள்...!
//மங்களூர் சிவா said...
ஆரியம் திராவிடம் பார்ப்பணியம், ஆணியம் பெண்ணியம், கம்யூனிசம் பாசிசம் ஆண்குறி கோணிப்பை, தேவையில்லா அரசியல் போன்ற அடிதடி கருமங்கள் நிறைந்த வலைப்பூ உலகில் இத்தகைய பொழுது போக்கு நிறைந்த வலைப்பூக்கள் எவ்வளவோ சிறந்தவை!!//
:-))))))))) வழிமொழிகிறேன்
Wow.. great. I like ur blog. Keep it up Mr.Nirubar.
வாழ்த்துக்கள் !
நானும் தேன்கூடு திரட்டியில் சேர எவ்வளவோ முயல்கிறேன் ! இன்று வரை முடியவில்லை .
யாரேனும் எங்கள் இருவருக்கும் உதவி செய்யுங்களேன் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
வாழ்த்துக்கள்....
சினிமா, என்பது தமிழனின் ரத்த ஓட்டம் மாதிரி, இதுவே நீங்கள் எவ்வளவுதான் நல்ல விழயங்கள் எழுதினாலும் வரவேற்ப்பு கம்மிதான் ,இது என் சொந்த அனுபவம். இருப்பினும் வாழ்த்துக்கள்
//ARUVAI BASKAR said...
வாழ்த்துக்கள் !
நானும் தேன்கூடு திரட்டியில் சேர எவ்வளவோ முயல்கிறேன் ! இன்று வரை முடியவில்லை .
யாரேனும் எங்கள் இருவருக்கும் உதவி செய்யுங்களேன் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//
என் பதிவும் தாமதமாக தான் இணைக்கப்பட்டது. உங்கள் பதிவு காத்திருப்பு பட்டியலில் இருந்தால் (அதாவது உங்கள் பதிவை சரிபார்த்துட்டு அனுமதிக்கிறோம்) கண்டிப்பாக இணைக்கப்படும். அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டி கொண்டு இருங்கள்.
//jackiesekar said...
சினிமா, என்பது தமிழனின் ரத்த ஓட்டம் மாதிரி, இதுவே நீங்கள் எவ்வளவுதான் நல்ல விழயங்கள் எழுதினாலும் வரவேற்ப்பு கம்மிதான் ,இது என் சொந்த அனுபவம். இருப்பினும் வாழ்த்துக்கள்//
நன்றி ஜாக்கிசேகர்...!
வாழ்த்துக்கள்! நிருபரே.....
சாதனைதானுங்கோ
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!