2008-06-30
விஜய் - த்ரிஷா நட்பு முறிந்ததா? கோலிவுட் KisuKisu
கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் டாக் விஜய் & த்ரிஷா நட்பு முறிந்து விட்டது என்பதைப் பற்றிதான். விஜய்க்கு பொறுத்தமான ஜோடி என்று சொல்லப்படும் த்ரிஷா, சமீபத்தில் கில்லி கூட்டணியில் உருவாகிய குருவி படத்திலும் விஜய்க்கு கதாநாயகி ஆனார். இந்த படத்தில் த்ரிஷா இடத்தில் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க முதலில் முயற்சி நடந்தது. பின்னர் பெரிய இடத்தில் த்ரிஷாவின் வாய்ஸ் எடுபட்டதன் விளைவாக குருவி வாய்ப்பு த்ரிஷாவுக்கே கிடைத்தது என்பது அப்போதைய செய்தி.
விஜய்யின் அடுத்த படத்திலும் த்ரிஷாதான் நாயகி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பை நயன்தாரா பெற்று விட்டார். இதனால் அப்செட்டில் இருந்த த்ரிஷாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. சமீபத்தில் விஜய் பிறந்த நாள் விழா மற்றும் ரசிகர் மன்ற கொடி அறிமுக விழாவுக்கு த்ரிஷாவை விஜய் அழைக்கவில்லையாம். கடைசி வரை ஒரு போனாவது பண்ணி அழைப்பார் என்று காத்திருந்த த்ரிஷா ஏமாற்றத்தில் மனம் வெதும்பிப் போய் விட்டாராம்.
அதே நேரத்தில் த்ரிஷாவின் வயிற்றெரிச்சலை கிளப்பும் வகையில் விஜய்யுடனேயே நயன்தாராவும் ஒட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களையெல்லாம் கோர்த்து கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாக்காக விஜய் & த்ரிஷா நட்பு முறிந்தது என்று பேசிக் கொள்கிறார்கள்.
Labels:
kisu kisu,
Nayanthara,
trisha,
vijay
EXCLUSIVE : ரஜினிதான் பெஸ்ட் : நயன்தாரா சர்டிபிகேட்
இன்றைய இளம் நாயகர்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் பெஸ்டாக இருக்கிறார் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
குசேலன் படம் குறித்து நடிகை நயன்தாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குசேலன் படத்தில் நான் ஒரு நடிகையாகவே நடிக்கிறேன். இதைத்தவிர வேறு தகவல் எதுவும் இப்போது சொல்ல முடியாது. படம் அடுத்த மாதம் ரீலிஸ் ஆகிறது அப்போது பார்த்து ரசியுங்கள். இந்த நேரத்தில் ரஜினிகாந்த் சாரை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே நான் அவருடன் சந்திரமுகி படத்தில் நடித்தேன். அப்போது நான் இந்த பீல்டுக்கு வந்த புதிது. சினிமா பற்றிய நாலெட்ஜ் அதிகம் இல்லாமல் இருந்தபோது அவர்தான் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். இப்போது குசேலன் சூட்டிங்கிலும் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
குறிப்பாக அவரது எளிமை என்னை கவர்ந்து இழுக்கிறது. எல்லோரிடமும் சகஜமாக பழகும் அவரது மன நிலை பிடித்திருக்கிறது. இன்றைய இளம் ஹீரோக்களைவிட ரஜினிகாந்த் சார்தான் பெஸ்ட். சிலர் ரஜினி சாருடன் ஜோடியாக நடிப்பது பற்றி கூறுகையில் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ரஜினி சாருடன் அடுத்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கினேன். குசேலன் வாய்ப்பு கிடைத்தது. டைரக்டர் பி.வாசு சார் என்னை அழைத்து ரஜினி சாருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. படம் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த சந்தோஷம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Labels:
exclusive,
Nayanthara,
rajinikanth
ரோபோ தாமதம் உறுதி : சிறப்பு செய்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த குசேலன் படத்தை தொடர்ந்து நடிக்கவிருக்கும் ரோபோ படம் தாமதமாகத்தான் தொடங்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் நடித்தார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மெகா ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து ரஜினி&ஷங்கர் கூட்டணியில் மேலும் ஒருபடம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. டைரக்டர் ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் நடிக்க ரஜினிகாந்தும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரோபோ படத்துக்கான பணிகள் தொடங்கின.
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கால்ஷீட் கேட்டனர். அவரும், ஏற்கனவே முன்பொரு முறை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். ரோபோவில் கண்டிப்பாக நடித்து கொடுக்கிறேன் என்று டைரக்டர் ஷங்கரிடம் தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ரோபோவில் பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின.
இதற்கிடையில்தான் ரஜினிகாந்தின் சினிமா உலக குரு பாலசந்தர், தனது கவிதாலயா நிறுவனத்துக்காக ஒரு படம் பண்ணிக் கொடுக்குமாறு ரஜினியிடம் கேட்டார். குரு சொல்லை தட்டமுடியாத ரஜினியும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படம்தான் குசேலன் என்ற பெயரில் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அசோக்குமார் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார்.
குசேலன் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ரோபோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ரோபோவுக்கு முன்பு மேலும் ஒரு படத்தில், அதுவும் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் கோலிவுட்டில் கசியத் தொடங்கி விட்டன. இதுபற்றி டைரக்டர் வாசுவிடம் கேட்டதற்கு, ரஜினிகாந்த் எனது இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிப்பது உறுதி. அது ரோபோவுக்கு முன்பா அல்லது ரோபோவுக்கு பிறகா? என்பதை ரஜினிகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ரஜினிகாந்த் வட்டாரத்தில் விசாரிக்கையில், ரோபோ படம் பிரமாண்ட படம் என்பதால் படத்தை எடுத்து முடிக்க குறைந்தது 8 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம். எனவே அதற்கு முன்பாகவே வாசு படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்து விடுவார் என்று தெரிவித்தனர். இதனால் சினிமா உலகமே பிரமிக்கும் வகையில் உருவாகவிருப்பதாக டைரக்டர் ஷங்கர் கூறி வரும் ரோபோ படம் தொடங்குவது மேலும் தாமதம் ஆவது உறுதியாகியுள்ளது. புதிய படம் குறித்த அறிவிப்பை குசேலன் படம் வெளியானதும் ரஜினிகாந்த் உறுதி செய்வார் என தெரிகிறது.
இன்றைய ஸ்பெஷல் 1024x768 Actress KAJAL EXCLUSIVE wallpaper
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை காஜல். நிருபர் வலைப்பூவின் தொடர் வாசகர் அமெரிக்கா செல்வம் அவர்களின் தனிமடல் கோரிக்கையை ஏற்று நடிகை காஜலின் வால்பேப்பர் எக்ஸ்குளுசிவ்வாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Labels:
Actress Wallpaper,
kajal agarwal
யாருடைய மனைவி இவர்? புதிய போட்டி
இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பெண் ஒரு முன்னணி இளம் நடிகரின் மனைவி. அந்த நடிகர் யார் என்று கண்டுபிடித்தால் உடனடியாக பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Labels:
yaar Ivar
2008-06-29
இன்றைய ஸ்பெஷல் : 1000x14000 நடிகை Keerthi Chawla
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை கீர்த்தி சாவ்லா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் நண்பர்களே...!
Labels:
Actress Wallpaper,
keerthichawla
நடன நடிகரை அவமானப்படுத்திய ராய் நடிகை : kisukisu கார்னர்
அந்த லட்சுமமான ராய் நடிகை நடித்த எந்த படமும் இதுவரை எந்த படமும் ஓடவில்லை. கிரிக்கெட் கேப்டனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டதன் மூலம் பிரபலமானவர் இவர். ஆனால் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமாகிய நடிகையைப் போல அலம்பல் செய்து வருகிறார். இதனால் தமிழ் திரையில் இவருக்கு வெட்டிபந்தா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தற்போது ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறார் இந்த நடிகை. அதாவது, நான் முன்னணி நாயகர்களுடன்தான் நடிப்பேன். புதுமுகங்களுடனோ, முன்னணி லிஸ்டில் இல்லாதவர்களுடனோ நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இதற்கு காரணம் என்ன? என்று விசாரித்தால், சமீபத்தில் நடன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். அப்போது நடனத்தின் முகத்தில் அடித்துபோல் பதில் சொல்ல லட்சும நடிகை, இதுபோன்றவர்களுடனெல்லாம் நடித்தான் என் இமேஜ் என்ன ஆவது என்று கொக்கரித்துள்ளார்.
இதுபோல இனி யாரும் தன்னிடம் வந்து கால்ஷீட் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் இனி முன்னணிகளுடன்தான் என்று நெற்றியில் எழுதி ஒட்டாத குறையாக சொல்லி வருகிறார் லட்சுமம்.
தற்போது ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறார் இந்த நடிகை. அதாவது, நான் முன்னணி நாயகர்களுடன்தான் நடிப்பேன். புதுமுகங்களுடனோ, முன்னணி லிஸ்டில் இல்லாதவர்களுடனோ நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இதற்கு காரணம் என்ன? என்று விசாரித்தால், சமீபத்தில் நடன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். அப்போது நடனத்தின் முகத்தில் அடித்துபோல் பதில் சொல்ல லட்சும நடிகை, இதுபோன்றவர்களுடனெல்லாம் நடித்தான் என் இமேஜ் என்ன ஆவது என்று கொக்கரித்துள்ளார்.
இதுபோல இனி யாரும் தன்னிடம் வந்து கால்ஷீட் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் இனி முன்னணிகளுடன்தான் என்று நெற்றியில் எழுதி ஒட்டாத குறையாக சொல்லி வருகிறார் லட்சுமம்.
Labels:
kisu kisu
தப்பு மாளவிகா மேலதான்: நடிகர் சங்கம் தீர்ப்பு
செக்ஸ் டார்ச்சர் புகார் விவகாரத்தில் மாளவிகா மீதுதான் தவறு இருப்பதாக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாளவிகா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டார் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு.
கார்த்தீகை பட சூட்டிங்கின்போது தன்னிடம் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, நான் ஒரு கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறி நடிகை மாளவிகா அதிரடி செக்ஸ் டார்ச்சர் புகார் செய்தார். இதனை மறுத்த கார்த்தீகை பட குழுவினர், மாளவிகாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை தேடி வருகிறது.
இந்நிலையில் மாளவிகா முழுக்க முழுக்க நம்பியிருந்த நடிகர் சங்கமும் அவரை கைகழுவி விட்டது. இதனால் வேதனையில் இருக்கிறார் அவர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் போனில் மாளவிகாவிடம் பேசினார். அப்போது, இன்னும் 10 நாட்கள் நடித்து கொடுத்தால் யாருக்கும் நஷ்டம் இல்லாமல் போய்விடும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சமாதானத்தை மாளவிகா ஏற்றுக் கொள்ளவில்லை. விடாப்பிடியாக படத்தில் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னர் சூட்டிங்கின்போது என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணை தொடங்கியது. விசாரணையில் மாளவிகா மீதுதான் தப்பு என்று தெரியவந்தது. இதையடுத்து நடிகர் சங்கத்தில் இருந்து மாளவிகாவுக்கு சப்போர்ட் கொடுப்பதில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் நடவடிக்கையில் தலையிடுவதில்லை என்றும் சரத்குமார் அறிவித்து விட்டார்.
இதையடுத்து மாளவிகா கொஞ்சம் கலக்கத்துடனேயே இருக்கிறார். இதுபற்றி கேட்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மாளவிகா மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, டைரக்டர் வீரா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
Labels:
Malavika
இனி ஆக்ஷன் அவதாரம்தான் : பரத் முடிவு
இனி ஆக்ஷன் அவதாரம் மட்டுமே எடுக்கப்போவதாக நடிகர் பரத் அறிவித்துள்ளார்.
ஒன்றிரண்டு படங்கள் ஓடிவிட்டாலே அதிரடி அறிவிப்பு என்கிற பெயரில் தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளும் அறிவிப்புகளை பல நடிகர்களின் பட்டியலில் நடிகர் பரத்தும் இணைந்துள்ளார். ஆம்..! இனி அவர் காதல் கதை உள்ள படங்களில் நடிக்க மாட்டாராம். ஒன்லி ஆக்ஷன் என்கிறார் காலரை தூக்கிக் கொண்டு. இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறுகையில், தற்போது நான் ஹரி இயக்கத்தில் சேவல், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம், பேரரசு இயக்கத்தில் திருத்தணி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த 3 படங்களுமே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். இனி நான் காதல் வட்டத்துக்குள் சிக்காமல் ஆக்ஷனில் கலக்கவிருக்கிறேன், என்றார். பரத் & பூர்ணா (சின்ன அசின்) நடிப்பில் உருவாகியுள்ள முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் காதல் ப்ளஸ் ஆக்ஷன் நிறைந்த படமாம்.
சின்ன அசின் படத்தை பார்த்த இங்கே சொடுக்கவும்.
Labels:
barath
2008-06-28
1000x1400 நடிகை KAMNA : இன்றைய ஸ்பெஷல்
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை காம்னா ஜெத்மலானி. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் நண்பர்களே..!
Labels:
Actress Wallpaper,
kamna
நமீதாவை பார்த்து மிரண்டு ஓடிய இயக்குனர்
நமீதாவின் பிரம்மாண்ட படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள் மத்தியில், நமீதா கேட்ட சம்பளத்தை பார்த்து மிரண்டு ஒடியுள்ளார் இயக்குனர் ஒருவர்.
நடிகை மாளவிகா கார்த்தீகை என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சூட்டிங்கில் படத்தின் தயாரிப்பார் ஆஞ்சநேயலு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததும், இதையடுத்து அவரை படத்தில் இருந்து நீக்கியதும் தெரிந்த சங்கதிதான்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கார்த்தீகை படத்தில் மாளவிகா இடத்தில் நமீதாவை நடிப்பார் என்று கூறப்பட்டது. படத்தின் டைரக்டரும் இதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து டைரக்டர் மற்றும் கார்த்தீகை பட குழுவினர் நடிகை நமீதாவிடம் இதுபற்றி பேசுவதற்காக சென்றனர். அப்போது நமீதா பேசிய பேச்சை கேட்டு அங்கிருந்த அனைவருமே அப்செட் ஆகி விட்டார்களாம்.
அப்படி என்ன பேசினார் நமீதா? இன்னொரு நடிகை நடித்த கேரக்டர்... அவர் நடிக்க முடியாது என்று சொன்னதால் என்னிடம் வந்திருக்கிறீர்கள். ரூ.30 லட்சம் சம்பளமாக தந்தால் படத்தில் நடிக்கிறேன், என்று தடாலடியாக சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார் நமீதா. சரி... தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு கார்த்தீகை குழுவினர் ஓட்டம் பிடித்து வந்து விட்டார்களாம். இப்போது வேறு நடிகை யாராவது சிக்குவார்களா? என்று தேடி வருவதாக தகவல்.
Labels:
Namitha
2008-06-27
குசேலனில் நடிக்க மறுத்த விஜய்-அஜித் : அதிர்ச்சி தகவல்
குசேலன் படத்தில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் ஆகியயோர் நடிக்க மறுத்தனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் படம் குசேலன். சூப்பர் ஸ்டார் நடிகராகவே ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கிறார். 75 ஆண்டுகால சினிமா வரலாற்றை பறைசாற்றும் வகையிலும், நட்பை மேன்மைப்படுத்தும் வகையிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சினிமா சினிமா சினிமாதான்... என்.டி.யாரு வந்ததும் இந்த சினிமாதான் என தொடங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்தின் ஹைலைட் பாடலான இந்த பாடலில் இளம் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களும் இடம்பெறுவார்கள் என்று குசேலன் படத்தின் இயக்குனர் பி.வாசு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அந்த பாடலின் சூட்டிங் சென்னை சாந்தி தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட டைரக்டர் வாசு, நிருபர்களிடம் பேசுகையில், குசேலனில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பதாக இருந்தது. இப்போது அவர்கள் நடிக்கவில்லை. ரஜினியின் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரசிகர்களை வைத்தே படமாக்கி விட்டோம் என்று கூறினார்.
சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கி வரும் நிலையில், இப்படி திடீர் அறவிப்பு வெளியிடுவதற்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. குசேலன் பட இயக்குனர் பி.வாசு, தங்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அறிவித்துள்ளார் என்று விஜயமான நடிகர் குறைபட்டுக் கொண்டாராம். அதோடு நில்லாமல் அஜி நடிகருக்கும், விக்ர நடிகருக்கும் போன் போட்டு பேசி, நாம நம்ம படங்கள்ல பிஸியா இருக்கும்போது, நம்மக்கிட்ட கேட்காம அறிவிச்சிருக்காங்க. அது எப்படி நடிக்க முடியும்? என்று கேட்டிருக்கிறார். இந்த விஷயம் வாசுவின் காதுகளுக்கு எட்டியது. அதனை வாசு, ரஜினிகாந்திடம் தெரிவிக்க... அப்போ... அவங்க வர்ற மாதிரி காட்சி வேண்டாம். ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ்நாடு முழுதும் இருந்து ரசிகர்களை வரச் சொல்கிறேன். அவர்களை படத்தில் பங்குபெற வைப்போம். ரசிகர்களுக்கு இப்படியரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை, என்று கூறியுள்ளார். இதையடுத்துதான் ரசிகர்களை வைத்து குசேலன் சூட்டிங் நடத்தப்பட்டதாம்.
இந்த தகவல் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரது காதுகளுக்கும் எட்ட... திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், இவங்கல்லாம்... அவங்க படத்துல ரஜினி படத்தையும், ரஜினி பேரையும் சொல்லி முன்னேறுனவங்க. இப்போ ரஜினி படத்துலயே நடிக்க மாட்டேன் என்கிறார்களே..! என்று வேதனைப்பட்டுக் கொண்டார்.
என்ன கொடுமை நண்பர்களே இது?
போலீசை கவனித்துவிட்டு குடியாட்டம்போடும் மூன்றெழுத்து நடிகை
இந்த மூன்றெழுத்து நடிகை அவ்வப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தோழிகளுடன் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதும், போலீசார் வந்து அவர்களை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைப்பதும் தொடர்கதைதான்.
ஆரம்பத்தில் அமைதியாக வந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சரக்கு அடித்து வந்த இந்த த்ரி நடிகை, கில்லியான படம் வெற்றிக்கு பிறகு அலம்பல் செய்ய ஆரம்பித்து விட்டார். தன்னை விட்டால் தமிழ் திரைப்படத்தில் முன்னணியில் யாரும் இல்லை என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு கடற்கரை சாலைக்கு வரும் இவருக்கு, அந்த சாலையில் ரோந்து சுற்றி வரும் சில போலீஸ்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
லோக்கல் போலீஸ்காரர்களும் நடிகை என்றதும் ஆ...வென பார்த்து ரசித்து விட்டு சமாதானம் பேசி... டிராபிக்கிற்கு இடைஞ்சல் செய்யாமல் இருங்க மேடம் என்று சொல்லி அனுப்பி வந்தனர். சமீபத்தில் இந்த நடிகை ஆளுமையிடத்து தயாரிப்பாளர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து விட்டதால் போலீஸ் காரர்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் அதிகரித்து விட்டதாம்.
இதனால் நாம ஏதாவது சொல்லி... அந்த விஷயம் பெரிய இடத்துக்கு போயிட்டுன்னா... என்று சொல்லி சில நியாயமான(?) காக்கிச்சட்டைகளும் வாயை மூடிக் கொள்கின்றனர். இதுஒருபுறம் இருக்க... தோழிகளுடன் நள்ளிரவு நேரத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு உதவும் போலீஸ் அதிகாரிகளையும் அம்மணி கவனிக்க(?) தவறுவதில்லையாம். பிரச்னை என்று வராமல் இருக்கிறவரை பிரச்சினை இல்லை என்கிற மனப்பான்மையை வளர்த்து வைத்துள்ள அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் அமைதியாக வந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சரக்கு அடித்து வந்த இந்த த்ரி நடிகை, கில்லியான படம் வெற்றிக்கு பிறகு அலம்பல் செய்ய ஆரம்பித்து விட்டார். தன்னை விட்டால் தமிழ் திரைப்படத்தில் முன்னணியில் யாரும் இல்லை என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு கடற்கரை சாலைக்கு வரும் இவருக்கு, அந்த சாலையில் ரோந்து சுற்றி வரும் சில போலீஸ்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
லோக்கல் போலீஸ்காரர்களும் நடிகை என்றதும் ஆ...வென பார்த்து ரசித்து விட்டு சமாதானம் பேசி... டிராபிக்கிற்கு இடைஞ்சல் செய்யாமல் இருங்க மேடம் என்று சொல்லி அனுப்பி வந்தனர். சமீபத்தில் இந்த நடிகை ஆளுமையிடத்து தயாரிப்பாளர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து விட்டதால் போலீஸ் காரர்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் அதிகரித்து விட்டதாம்.
இதனால் நாம ஏதாவது சொல்லி... அந்த விஷயம் பெரிய இடத்துக்கு போயிட்டுன்னா... என்று சொல்லி சில நியாயமான(?) காக்கிச்சட்டைகளும் வாயை மூடிக் கொள்கின்றனர். இதுஒருபுறம் இருக்க... தோழிகளுடன் நள்ளிரவு நேரத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு உதவும் போலீஸ் அதிகாரிகளையும் அம்மணி கவனிக்க(?) தவறுவதில்லையாம். பிரச்னை என்று வராமல் இருக்கிறவரை பிரச்சினை இல்லை என்கிற மனப்பான்மையை வளர்த்து வைத்துள்ள அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
Labels:
kisu kisu
இன்றைய 1000X1400 ஸ்பெஷல் : Actress BHOMIKA
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை பூமிகா. கைநிறைய பூக்களுடன் புன்னகை பூரிக்கும் பூமிகா படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Labels:
bhumika,
todays special
2008-06-26
EXCLUSIVE : குசேலனில் விஜய், அஜித் இல்லை
குசேலன் படத்தில் விஜய், விக்ரம், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குசேலன் படத்தின் ஹைலைட் பாடலான சினிமா சினிமா சினிமாதான் பாடலில், முன்னணி நடிகர்களான இளம் விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இடம்பெறுகிறார்கள் என்ற தகவல் ஏற்கனவே கசிந்தது. ஆனால் இப்போது அவர்கள் யாரும் குசேலன் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு நடிகரின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் ரசிகர்களை வைத்தே இந்த பாடலை எடுக்க முடிவு செய்த டைரக்டர் பி.வாசு, இந்த பாடலில் பெரும் பகுதியில் ரஜினிகாந்தின் உண்மை ரசிகர்களின் முகத்தை காட்டுகிறார். இதுதவிர இப்பாடலில் என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ராஜ்குமார் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களின் முகத்தை காட்டுகிறார்களாம்.
Labels:
Kuselan,
rajinikanth
குசேலனில் ரஜினிக்கு பால் அபிஷேகம்
குசேலன் படத்தில் ரஜினி கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகவே நடித்து வரும் படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவும் நடிகையாகவே நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் ரஜினிகாந்த் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியின்போதே சாந்தி தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட்&அவுட்டுக்கு படத்தில் ரசிகர்களாக நடிக்கும் உண்மையான ரசிகர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதுவும் படமாக்கப்பட்டது. தியேட்டர் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்து ஆங்கிலத்தில் வரும்போதும், சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும்போதும் ரசிகர்கள் திரையின் முன்பு சூடம் காண்பித்து, விசில் அடித்து அலம்பல் செய்வது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இதுபற்றி டைரக்டர் வாசு கூறுகையில், ரஜினிகாந்துக்கு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறவிருக்கிறது. குசேலன் ரீலிஸ் ஆன பிறகு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் அமர்ந்து படம் பார்க்க விரும்புகிறார், என்றார்.
சாந்தி தியேட்டரில் எடுக்கப்பட்ட காட்சிகள் குசேலனின் ஹெலைட் பாட்டான சினிமா... சினிமா... சினிமாதான் என்ற பாடலில் இடம் பெறும் என்பது கொசுறு தகவல்.
Labels:
Kuselan,
meena,
Nayanthara,
pasupathi,
rajinikanth
அசினின் அடுத்த சாதனை : பாலிவுட் பெருமிதம்
தனது பரந்து விரிந்த மனதால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அசின் புயல் தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்த பாலிவுட் திரையுலகம், அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறது. இந்தி கஜினியில் நடித்து வரும் அசின் இனி தமிழுக்கு வரமாட்டார் என்று ஒரு கோலிவுட்டில் புரளி கிளம்பியது. ஆனால் அசின் அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்தினார். அந்த வரிசையில் இப்போது சாதனையின் அடுத்த படிக்கல்லில் கால் பதித்திருக்கிறார் நடிகை அசின். சினிமா நட்சத்திரங்கள் மெச்சிக்கு கொள்ளும் வோக் என்ற பத்திரிகையின் இந்த வார பதிப்பு அட்டைப்படத்தில் நடிகை அசினின் படம் வெளியாகியுள்ளது. அதில் அசினைப் பற்றிய டேட்டாக்களும், பேட்டியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த பத்திரிகையில் தங்களது படம் வராதா? என்று பல நடிகைகள் ஏங்கி வரும் நிலையில் தனது படம் அட்டைப்படமாகவே வந்தது ஒரு சாதனையாகவே கருதுகிறார் அசின்.
ம்...! மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்தால் சரிதான்...!
மீண்டும் தமிழ் சினிமா வருவது குறித்து அசின் சினிமா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்.
Labels:
asin
இன்றைய 1000x1400 ஸ்பெஷல் : Hot Iliyana
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை இலியானா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் நண்பர்களே...!
Labels:
iliyana,
todays special
செக்ஸ் டார்ச்சர் : மாளவிகா மீது நடவடிக்கை
பட அதிபர் செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று மாளவிகா புகார் கூறதையடுத்து அவரை கார்த்தீகை படத்தில் இருந்து நீக்கி படத்தின் இயக்குனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா கார்த்தீகை என்ற படத்தில் நடிப்பதாக திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தமானார். அவர் தொடர்பான காட்சிகளிலும் கொடுத்த தேதிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் மாளவிகாவுக்கு திருமணம் நடந்தது. தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா, கார்த்தீகை படத்தில் நடிக்க முடியாது என்று கூறி வந்தார். இதையடுத்து படத்தின் டைரக்டர் வீரா, கொஞ்சாத குறையாக அவரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். பாடல் காட்சி சூட்டிங்கில் கடினமான நடன அசைவுகள் இருந்ததால், அதில் நடிக்க முடியாது என்று மாளவிகா மறுத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த படஅதிபர் ஆஞ்சநேயலு மாளவிகா இருந்த கேரவனுக்குள் சென்று, நீ கர்ப்பமா, இல்லையா என்று வயிற்றை தொட்டுப் பார்க்கிறேன் என கூறி தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி நடிகை மாளவிகா நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் செய்ததுடன், குழந்தை பிறந்த பிறகே கார்த்தீகை படத்தில் நடிப்பேன் என்று கூறிவிட்டு மும்பைக்கு சென்று விட்டார். இதையடுத்து படஅதிபர் நஷ்டஈடு கேட்டு 2 வழக்குகள் போடுவேன் என்று மிரட்டினார். என்ன வந்தாலும் பரவாயில்லை; சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லி வந்தார் மாளவிகா.
இந்நிலையில் தற்போது மாளவிகா மீது நடவடிக்கை எடுத்துள்ளார் டைரக்டர் வீரா. இது குறித்து இயக்குனர் வீரா கூறுகையில், மாளவிகாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகை நடிக்கிறார். நஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய மாளவிகா மீது ரூ.75 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம், என்றார்.
Labels:
karthikai,
Malavika,
tamil actress
2008-06-25
நடிகையின் வீட்டுக்குள் நள்ளிரவு கசமுசா : Kisu Kisu கார்னர்
கருவாப்பையா... கருவாப்பையா... என்று வட்டமிட்டு ஆடிப்பாடிய கார்த்திகை நடிகையை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விடமாட்டார்கள். Malavika வுக்கு எப்படி ஒரு... கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு... பாடலோ, அதேபோல இந்த கார்த்திகைக்கு இந்த கருவாப்பையா பாடல் பெயரை வாங்கித் தத்தது.
சரி... விஷயத்துக்கு வருகிறேன். கார்த்திகை வாடகைக்கு குடியிருந்த வீடு பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கார்த்திகை சரிவர வாடகை கொடுக்கவில்லை என்று கூறி அபார்ட்மெண்ட் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதனை நடிகையும் மறுத்தார். இந்த செய்தியின் பின்னணி என்ன என்று விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
கார்த்திகை நடிகை வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்ட். அந்த அபார்ட்மெண்ட்டுக்கு என்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி கெஸ்ட்கள் வரக்கூடாது என்பது. ஆரம்பத்தில் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வந்த கார்த்திகா, காலப்போக்கில் கட்டுப்பாடுகளையெல்லாம் காற்றிலே பறக்க விடத் தொடங்கினார்.
இரவு நேரத்தில் கெஸ்ட் என்ற பெயரில் சினிமாத்துறை மற்றும் சினிமாத்துறையல்லாத பிரமுகர்களும் வந்து செல்வார்களாம். நள்ளிரவு நேரத்தில் அரங்கேறும் கசமுசாக்கள் அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் மற்ற குடும்பத்தினரை முகம் சுழிக்க வைத்ததாம். பாட்டு, கூத்து என்ற நாட்கள் நகர்ந்து வந்தன. அபார்ட்மெண்ட் உரிமையாளர் வரை விவகாரம் செல்லப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகையின் வீட்டுக்கு வந்த அபார்ட்மெண்ட் உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டாராம். காலி செய்ய மறுத்த கார்த்திகை, அதன் பிறகு சரிவர வாடகையையும் கொடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்துதான் விவகாரம் வெடித்து போலீசில் புகார் கொடுப்பது வரை சென்றுள்ளது. எங்கே போய் முடியுமோ இந்த பிரச்சினை...!
ACTRESS WEB ADDRESS : நிருபரின் டைரியில் இருந்து...!
நடிகைகளைப் பற்றி பல இணையதளங்களில் இடம்பெற்றிருக்கும் செய்திகள், பேட்டிகள், படங்களை பார்த்திருப்பீர்கள். அவர்களது சொந்த இணையதளத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா? சினிமா ரசிகர்களுக்கு பயன்தரத்தக்க இணையதள முகவரிகள் இதோ...!
நடிகை நமீதா (Namitha) : http://www.namitha.info
நடிகை அசின் (Asin) : http://www.asinonline.com
நடிகை ஐஸ்வர்யாராய் (Aishwarya rai) : http://www.aishwarya-rai.com
நடிகை பூமிகா சாவ்லா (Bhoomika Chawla) : http://www.bhoomikachawla.info
நடிகை கோபிகா (Gopika) : http://www.gopika.info
நடிகை கஜோல் (Kajol) : http://www.kajolonline.net
நிஷா கோதாரி (எ) அமோகா (Nisha Kothari) : http://www.nishakothari.info
நடிகை ரேணுகா மேனன் (Renuka Menon) : http://www.renukamenon.info
நடிகை சினேகா (Sneha) : http://www.snehaonline.info
நடிகை நயன்தாரா (Nayantara) : http://www.nayantaraonline.info
நடிகை த்ரிஷா (Trisha Krishnan) : http://www.trishaonline.info
நடிகை மதுமிதா (Madhu Mitha) : http://www.madhumitha.info
நடிகை ஸ்ரேயா (Shriya) : http://www.shriyaonline.info
நடிகை ஜோதிகா (Jothika) : http://www.jyotika.info
நடிகை ப்ரியாமணி (Priyamani) : http://www.priyamani.info
நடிகை சிம்ரன் (Simran) : http://www.simplysimran.com
நடிகை கிரண் (Kiran) : http://www.kiranontheweb.com
நடிகை லைலா (Laila) : http://www.laila.net
நடிகை மீனா (Meena) : http://www.meenaonthenet.com
நடிகை சங்கவி (Sangavi) : http://www.sangavi.com
நடிகை ஷாலினி (Shalini) : http://www.shalinionline.com
நடிகை மும்தாஜ் (Mumthaj) : http://www.mumtazonline.com
நடிகை ரீமாசென் (Reema sen) : http://www.reemasen.com
நடிகை ஷெரீன் (Sherin) : http://www.ilamaisherin.com
நடிகை நமீதா (Namitha) : http://www.namitha.info
நடிகை அசின் (Asin) : http://www.asinonline.com
நடிகை ஐஸ்வர்யாராய் (Aishwarya rai) : http://www.aishwarya-rai.com
நடிகை பூமிகா சாவ்லா (Bhoomika Chawla) : http://www.bhoomikachawla.info
நடிகை கோபிகா (Gopika) : http://www.gopika.info
நடிகை கஜோல் (Kajol) : http://www.kajolonline.net
நிஷா கோதாரி (எ) அமோகா (Nisha Kothari) : http://www.nishakothari.info
நடிகை ரேணுகா மேனன் (Renuka Menon) : http://www.renukamenon.info
நடிகை சினேகா (Sneha) : http://www.snehaonline.info
நடிகை நயன்தாரா (Nayantara) : http://www.nayantaraonline.info
நடிகை த்ரிஷா (Trisha Krishnan) : http://www.trishaonline.info
நடிகை மதுமிதா (Madhu Mitha) : http://www.madhumitha.info
நடிகை ஸ்ரேயா (Shriya) : http://www.shriyaonline.info
நடிகை ஜோதிகா (Jothika) : http://www.jyotika.info
நடிகை ப்ரியாமணி (Priyamani) : http://www.priyamani.info
நடிகை சிம்ரன் (Simran) : http://www.simplysimran.com
நடிகை கிரண் (Kiran) : http://www.kiranontheweb.com
நடிகை லைலா (Laila) : http://www.laila.net
நடிகை மீனா (Meena) : http://www.meenaonthenet.com
நடிகை சங்கவி (Sangavi) : http://www.sangavi.com
நடிகை ஷாலினி (Shalini) : http://www.shalinionline.com
நடிகை மும்தாஜ் (Mumthaj) : http://www.mumtazonline.com
நடிகை ரீமாசென் (Reema sen) : http://www.reemasen.com
நடிகை ஷெரீன் (Sherin) : http://www.ilamaisherin.com
Labels:
actress web address
Asin தெரியும்... சின்ன அசினை தெரியுமா?
தலைப்பை பார்த்ததும் குட்டி ராதிகா போல் சின்ன அசின் என்ற பெயரில் யாராவது புது நடிகை வந்து விட்டாரோ? என்று நினைத்து விடாதீர்கள்.
டைரக்டர் திருமுருகன் தற்போது எடுத்து வரும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நாயகன் பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ள புதுமுக நடிகை பூர்ணாவைத்தான் இப்படி எல்லோரும் அழைக்கிறார்கள். ஒரு சிலர் இவரை அசினின் ஐம்பது காசு ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறார் என்று வர்ணிக்கிறார்கள்.
சமீபத்தில் முனியாண்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய்யும், பூர்ணாவை சின்ன அசின் என்று வர்ணித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். இந்த பட்டம் குறித்து புதுமுக நடிகை பூர்ணா கூறுகையில், எனக்கு அசினை ரொம்ப பிடிக்கும். என்னை விஜய் சாரே சின்ன அசின்னு சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முனியாண்டி படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. படம் வந்ததும் பார்த்துட்டு, நான் அசின் அளவுக்கு இல்லன்னாலும் எப்படி நடிச்சிருக்கிறேன்னு சொல்லுங்க, என்றார் கொஞ்சும் குரலுடன்.
Labels:
Poorna
இன்றைய ஸ்பெஷல் HOT KAMALINI MUGARJI
வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கமாலினி முகர்ஜிதான் இங்கே நீங்கள் பார்ப்பது. இந்த கிளாமர் படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா செஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Labels:
kamalini mugarji,
todays special
2008-06-24
எஸ்.ஜே.சூர்யாவிடம் சிக்கிய பாலிவுட் நடிகை
தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகிகளிடம் இரட்டை அர்த்த வசனம் பேசி, வெலவெலக்க வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் இந்த முறை சிக்கியிருப்பவர் பாலிவுட் நடிகை ஷயாலி.
எஸ்.ஜே.சூர்யா தற்போது நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க தமிழில் பல நடிகைகளை கேட்டனர். ஆனால் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பயந்து ஓட்டம் பிடித்ததுதான் மிச்சம். இருப்பினும் மனம் தளராத நியூட்டன் குழுவினர் மும்பையில் இருந்து பாலிவுட் பப்பாளிப்பழத்தையே நாயகியாக கொண்டு வந்து விட்டனர். இந்தியில் வெளியான தி டிரெயின், ஹல்லா போல் போன்ற படங்களில் நடித்துள்ள ஷயாலி, நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் டி.வி. காம்பியராக நடித்துள்ளாராம்.
சூர்யாவின் இந்த படத்தில் `அந்த` மாதிரியான வசனங்கள் இல்லை என்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன். (சத்தமா சொல்லாதீங்க முத்துசெல்வன்... அப்புறம் எஸ்.ஜே.எஸ். (S.J.SURYA) ரசிகர்கள் கோவிச்சுக்கப் போறாங்க...!)
செக்ஸ் புகார் : மாளவிகாவுக்கு படஅதிபர் கெடு
தவறாக நடக்க முயன்றார் என்று பட அதிபர் மீது செக்ஸ் புகார் கூறிய மாளவிகாடுவுக்கு ஜூலை 1ம்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை மாளவிகா தற்போது கார்த்தீகை என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா இயக்குனரி்ன் கோரிக்கையை ஏற்று நடிக்க வந்தார். அப்போது பட அதிபர் ஆஞ்சநேயலு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று மாளவிகா புகார் கூறினார். இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் தெரிவித்த மாளவிகா, இனி குழந்தை பிறந்த பிறகுதான் அந்த படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாளவிகாவுக்கு வரும் 1ம் தேதி வரை கெடு விதிப்பதாக படஅதிபர் ஆஞ்சநேயலு கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், கார்த்தீகை படத்தில் இன்னும் பதினைந்து நாட்கள் மாளவிகா நடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மாளவிகா, குழந்தை பிறந்தபிறகே நடிப்பேன் என்கிறார். இதனால் படத்தி்ற்கு முதலீடு செய்த நான்கு கோடி, கேள்விக்குறியாகியுள்ளது. மாளவிகாவை படத்திலிருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை நடிக்க வைக்கலாம் என்றால், ஏற்கனவே எடுத்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் முக்கால் கோடியை தாண்டிவிடும். எனவே வரும் ஜூலை 1ம் தேதிக்குள் மாளவிகா மீண்டும் நடிக்க வரவேண்டும். இல்லையேல் அவர்மீது இரு வழக்குகள் தொடரப்படும், என்றார்.
தன் மீது பொய் புகார் கூறியதற்கு ஒரு மானநஷ்ட வழக்கும், படத்திற்கு ஏற்பட்ட பொருளிழப்புக்கு ஒரு நஷ்டஈடு வழக்கும் என இரண்டு வழக்குகள் போடப்படும் என்று ஆஞ்சநேயலு கூறியிருக்கிறார்.
இதுபற்றி மாளவிகாவிடம் கேட்டதற்கு, அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக வழக்கை சந்திப்பேன், என்றார். அதேநேரத்தில் மாளவிகாவிடம் சமாதானம் பேசவும் சில மூத்த நடிகர்கள் முயன்று வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் மாளவிகா சமாதானமாக செல்ல வேண்டுமா, இல்லை வழக்கு சண்டை போடலாமா என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
Labels:
Malavika
நடிகரின் டார்ச்சரால் அவசர திருமணம் செய்யும் நடிகை
நடிகர் ஒருவரது கல்யாண டார்ச்சர் காரணமாக அம்மு நடிகைக்கு அவசரம் அவசரமாக வேறு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
அம்மு என்ற பெயரில் விபசார அழகியாக திரையில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகியின் மேல் அந்த வித்தியாச நடிகருக்கு ஒரு கண். போதாதற்கு இருவரும் சேர்ந்து நடித்த அந்த படத்தில் வேறு உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான காட்சிகள். மனைவி விவாகரத்து செய்துவிட்டு இருக்கும் வித்தியாச நாயகன், அம்முவிடம் கிறுக்கல் கவிதைகளை எடுத்து விட்டிருக்கிறார். பின்னர் காதல் மொழி பேசத் தொடங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் வித்தியாச நாயகனின் வழக்கமான கடி காமெடி என நினைத்துக் கொண்டிருந்த அம்முவுக்கு திடீரென ஒரு நாள் அதிர்ச்சி. என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டிருக்கிறார் அந்த நாயகன். இந்த அதிர்ச்சியில் இருந்து நாயகி மீண்டு வருவதற்குள், வித்தியாசம் மீண்டும் மீண்டும் கல்யாண டார்ச்சர் செய்யத் தொடங்கியிருக்கிறது.
பொறுத்துப்பார்த்த நாயகி, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்ல... விவகாரம் வெளியே தெரிந்தால் சிக்கலாகி விடும் என கருதி, கப் சிப்பென் அம்முவுக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டனர். உறவினர் ஒருவரையே திருமணம் செய்யவிருக்கும் அம்மு, திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கமே தலை வைத்து படுக்கப் போவதில்லை என்று சபதம் ஏற்றுள்ளாராம்.
வித்தியாச நாயகனும், அம்மு நாயகியும் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா வாசகர்களே... கண்டுபடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
Labels:
kisu kisu
நயன்தாரா உடலில் புகுந்த ஆத்தா : சூட்டிங்கில் பரபரப்பு
நயன்தாரா உடலில் ஆத்தா புகுந்து விட்டதாக சினிமா சூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று சத்யம். இந்த படத்தில் வெற்றி நாயகன் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா கவர்ச்சியிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறாராம். படத்தில் தெய்வலட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவுக்கு டி.வி. சேனலில் பயிற்சி நிருபர் வேலை. அவர் வசிக்கும் அபார்ட்மெண்டில் செம லூட்டி அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த லூட்டியில் ஒன்றுதான் அம்மன் அருள் வந்து ஆடுவது போன்ற காட்சி. இந்த காட்சியில் நயன்தாரா ரொம்பவே இயல்பாக நடித்தார். அவரது நடிப்பை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அசந்து போய்விட்டார்கள்.
ஆத்தா வேடம் போட்டு ஆடிய பிறகு கேரவனுக்கு வந்துள்ளார் நயன்தாரா. அடுத்த ஷாட்டுக்காக டைரக்டர் அழைக்க... அப்போது திடீரென நயன்தாரா சாமி வந்து ஆடியதுபோல ஆடினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஒருசிலர் பயந்து விட்டனர். அதன்பின்னர் ரிலாக்ஸ் ஆன நயன்தாரா..., எல்லோரும் ஏமாந்துட்டீங்களா? என்ற கூறி விழுந்து விழுந்து சிரித்தார். சூட்டிங்கில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு அடங்கி, சிரிப்பலையில் மூழ்கியது. நயன்தாரா ஆத்தா வேஷம் போட்டு ஆட்டம் போட்ட படங்களைத்தான் மேலே படத்தில் பார்க்கிறீர்கள்.
TODAY's SPECIAL :1000 x 1300 அஞ்சலி
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தில் கண்ணீரும் கம்பலையுமாக தோன்ற அசத்திய அஞ்சலி, இப்போது சுந்தர்சி.யுடன் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் அமர்க்களப்படுத்தியுள்ளார். படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் வாசகர்களே...!
Labels:
Anjali,
todays special
2008-06-23
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள் வாசகர்களே...! வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காத்தான் இப்படி தலைப்பு.
சரி நேராக விஷயத்துக்கு வருகிறேன். வலைப்பதிவர் முத்துலட்சுமி கயல்விழி... நமக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார். அதில், நிருபர் வலைப்பூ திறப்பதற்கு 5 நிமிடங்கள் ஆகிறதுஎன்று கூறியுள்ளார். கயல்விழி முத்துலட்சுமியின் பின்னூட்டம் வருமாறு:-
//கயல்விழி முத்துலெட்சுமி said...
கிரி வைத்திருந்த அதே வெப் கவுண்ட்டர் தான் நீங்களும் வச்சிருக்கீங்க போல.. உங்க பதிவ திறந்ததுக்கு 5 நிமிசம் என் கணினி அப்படியே நின்னு போச்சு.. windows installer வந்து எதோ இன்ஸ்டால் செய்யறேன்னுது.. அப்பரம் பாரத் ஸ்டூடண்ட் .காம் ன்னு விளம்பரம் வேற பாப் அப் ஆகுது.. இத சொன்னதுக்கப்பறம் கிரி அவர் பதிவில் வெப் கவுண்ட்டர் தான் பிரச்சனைன்னு எடுத்துட்டார்.. சரி பார்க்கவும்..//
இதில் எனக்கு தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால்... உங்களில் யாருக்கெல்லாம் கயல்விழி முத்துலட்சுமி கூறும் பிரச்னை வருகிறது என்பதுதான். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்னை இருந்தால் தெரியப்படுத்துங்கள் வாசகர்களே...! வலைப்பூவில் இந்த நேரத்தில் எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக வைத்துள்ள இந்த வெப்கவுண்டரால் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஒரு நிமிடத்துக்குள் வலைப்பூ திறந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்னை என்றுசொல்லப்படும் வெப் கவுண்டரை தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது நீக்கி விடலாமா என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
1000x1300 செம கிளாமர் படம் : குசேலன் நயன்தாரா
குசேலன் படத்தில் நடிகை நயன்தாரா ரொம்பவே கிளாமராக நடித்துள்ளாராம். நயன்தாரா தோன்றும் ஒரு காட்சிதான் இது. நிருபரின் இன்றைய ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள இந்த படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
மனைவியுடன் கருத்து வேறுபாடு : ரஜினி பரபரப்பு பேச்சு
தனது மனைவி லதாவுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி - நந்தினி திருமணம் சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக வாழ்க்கை தத்துவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-
வைரமுத்து எனக்கு நீண்ட கால நண்பர். அவரு நிறைய நண்பர்கள சம்பாதிச்சிருக்காருன்னு இப்ப... இந்த கல்யாணத்தின் மூலமா தெரியுது. பொதுவா கவிஞர்னா தனியா இருக்கிறவங்க. தனிமைய ரசி்ச்சி கவிதை எழுதுறவங்கன்னு சொல்லுவாங்க. ஆனா... இவருக்கு... வைரமுத்துக்கு இவ்வளவு நண்பர்கள சம்பாதிக்க எப்டி நேரம் கெடச்சிதுன்னு தெரியல.
கல்யாணமாகுற புதுமண தம்பதிங்கள வாழ்த்துறதோட சில விஷயங்ள இங்க சொல்றேன். என்னோட அனுபவத்துல நான் இத சொல்றேன். கணவன்- மனைடிக்கும் கருத்து வேறுபாடுங்கிறதே இல்லாம இருக்காது. அது இந்த ரஜினிகாந்திற்கும்- லதாவுக்கும் இடையே கூட வந்திருக்கு. எங்களுக்குள்ள கருத்து வேறுபாவே வரலன்னு யாராச்சும் சொன்னாங்கன்னா... அவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம்.
நிம்மதிய விட பெரிய சொத்து எதுவுமே இல்ல. பணம், புகழ்னு நெறைய சம்பாதிச்சாலும் நிம்மதி இருந்தாத்தான் அந்த பணம் புகழ அனுபவிக்க முடியும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தா நல்ல வாழ்க்கை வாழலாம் என்று கூறி மணக்களை வாழ்க பல்லாண்டுன்னு வாழ்த்துறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விஜய் ரசிகர் மன்ற கொடி EXCLUSIVE PHOTO
நடிகர் விஜய் நேற்று தனது 35வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். விழாவின்போது விஜய் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தினார். விஜய் கொடியை இங்கே படத்தில் பார்த்துவிட்டு, விஜய் கொடி அறிமுகப்படுத்தியது குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
இந்த கண்கள் யாருடையது? போட்டி முடிவு
இந்த கண்கள் யாருடையது? என்ற கேள்வியுடன் ஒரு அழகான கண்களின் படத்தையும் வெளியிட்டு புதிய போட்டியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கினோம். இதனை ஏராளமான வாசகர்கள் பார்த்து சென்றதுடன், ஆளாளுக்கு ஒவ்வொரு நடிகையின் பெயரை பின்னூட்டமாக தெரிவித்தனர். இதோ அந்த போட்டியின் முடிவு. அட... அந்த அழகான கண்களுக்கு சொந்தக்காரர் நம்ம மீனா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
இந்த கண்கள் யாருடையது? போட்டியில் இடம்பெற்ற படத்தையும், போட்டியில் பங்கேற்று வாசகர்கள் எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
இந்த கண்கள் யாருடையது? போட்டியில் இடம்பெற்ற படத்தையும், போட்டியில் பங்கேற்று வாசகர்கள் எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
2008-06-22
விறகு கட்டையா நமீதா கால்? ஜகன்மோகனி EXCLUSIVE
விறகு கட்டை போல அடுப்பில் காலை வைத்து சமைப்பவர் நடிகை நமீதா. ஜகன் மோகினி படத்துக்காக இப்படிப்பட்ட காட்சி படமாக்கப்படுகிறது. கிராபிக்ஸ் யுத்தி இல்லாத அந்த காலத்திலேயே விட்டலாச்சார்யா ஜகன்மோகினியில் கலக்கலான காட்சிகளை எடுத்திருந்தார். இன்றைய கிராபிக்ஸ் உலகில் சொல்லவா வேண்டும்?
1000x1400 வில்லு ஸ்பெஷல் கேலரி
இளைய தளபதி தற்போது நடித்து வரும் வில்லு படத்தின் ஸ்பெஷல் கேலரியை இங்கே வெளியிட்டுள்ளோம். படங்களை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து, பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல இங்கே கிளிக்கவும்.
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல இங்கே கிளிக்கவும்.
விஜய்க்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க..!
இளைய தளபதி விஜய் இன்று தனது 35வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
தமிழ் திரைப்படங்களில் கடந்த 16 ஆண்டுகளாக நடித்து வரும் விஜய், இதுவரை 45 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு விஜய்க்கு என்று அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உருவாகியது. திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, கில்லி என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் அணிவகுத்து வந்தன. சமீபத்தில் வெளியான குருவியும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்து வரும் இளைய தளபதி இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்துவதுதான். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அகில இந்திய விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2008-06-21
இந்த கண்கள் யாருடையது? புதிய போட்டி
நிருபர் வலைப்பூவில் யார் இந்த நடிகை? என்ற தலைப்பில் புதிய பகுதியை கடந்த வாரம் ஆரம்பித்தோம். ஏராளமான வாசகர்கள் அந்த பகுதியை பார்த்து சென்றனர். சிலர் பின்னூட்டமிட்டனர். அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டு அடுத்த போட்டிக்கான கேள்வியை கேட்கிறேன். படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அழகு கண்களுக்கு சொந்தக்கார நடிகை யார்? படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து விட்டு, பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு குசேலன் என்ற பெயரில் மலையாள ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலக நட்சத்திரங்களின் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
குசேலன் படத்தைப் பற்றி ஏற்கனவே சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். அதனை ஏராளமான ரசிகர்கள் படித்து ரசித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு நற்செய்தி ரஜினி ரசிகர்களை தேடி வந்துள்ளது. ஆம் குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 30ம் தேதி ரீலிஸ் ஆகவிருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் படத்தின் ரீலிஸ் தேதியும் தெரியவந்துள்ளது. குசேலன் படத்தை வருகிற ஜுலை மாதம் 25ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். தெலுங்கில் தயாராகியுள்ள கதாநாயடு படமும் அதே நாளில்தான் திரையிடப்படுகிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் பி.வாசுவிடம் கேட்டபோது, குசேலனை ஜுலை 25ம் தேதி வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினிகாந்ததை பொறுத்தவரை அவரது பணிகளை முடிந்து விட்டார். எப்போது வேண்டுமானாலும் படத்தை ரீலிஸ் செய்யுங்கள் என்று கூறி விட்டார். ஆடியோ ரீலிஸ் விழாவின்போது குசேலன் ரீலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம், என்றார்.
இதற்கிடையில், மேக்கிங் ஆஃப் குசேலன் என்ற பெயரில் குசேலன் உருவான கதையையும் சிடியாக எடுத்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பது கொசுறு தகவல்.
குசேலன் பற்றிய சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
1000 x 1400 நயன்தாரா Exclusive still
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் ஸடில் நடீகை ;நயன்தாரா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் வாசகர்களே..!
மாளவிகாவுக்கு செக்ஸ் டார்ச்சர் : பரபரப்பு புகார்
நடிகை மாளவிகாவுக்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் செய்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகையே பரபரப்பு உள்ளாக்கியுள்ளது.
உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவர் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற தொழிலதிபரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் மாளவிகா தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார்.
இந்நிலையில ஏற்கனவே ஒப்பந்தமான கார்த்தீகை என்ற படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் மாளவிகா சென்னை வந்தார். சென்னையில் படத்தின் தயாரிப்பாளரான ஆஞ்சநேயலு மாளவிகாவுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்ததாக கூறப்பட்டது. இதில் கோபமடைந்த மாளவிகா சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்று சொல்லி விட்டு மும்பைக்கு பறந்து விட்டார்.
இந்த செய்தி நேற்று இரவு முதலே தமிழ் திரையுலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து நடிகை மாளவிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். முதலில் பேட்டியெல்லாம் வேண்டாம் என்று சொன்ன மாளவிகா, பின்னர் கண்ணீருடன் பேசத் தொடங்கினார்.
மனசாட்சியே இல்லாத மனிதர்கள். அந்த தயாரிப்பாளர் ஆஞ்நேயலு, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்தும் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும். தயவு செய்து வந்து நடித்து கொடுங்கள் என்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் சூட்டிங்கில் பங்கேற்பற்காக வந்தேன். வந்த இடத்தில்தான் அவர் என்னை டார்ச்சர் செய்தார். இதனை நான் கண்டித்தேன்.
இதனால் கோபமடைந்த அவர், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு விட்டு போ... என்றார். அதற்கு நான், என்னால் ஆட முடியாது, கடினமான காட்சிகளில் நடிக்க முடியாது என்று கூறினேன். இதையடுத்து, நீ கர்ப்பமாக இருக்கிறாயா, எங்கே உன் வயிற்றை காட்டு... தொட்டுப் பார்க்கிறேன் என்று கூறி இன்னும் வெளியில் சொல்ல முடியாத வார்த்தைளால் கீழ்த்தரமாக பேசினார். அப்போது எனக்கு அழுகையாக வந்தது.
இவ்வாறு சொல்லிக்கொண்டே கண்ணீர் வடித்தார் மாளவிகா. இதையடுத்து அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டு போன் இணைப்பை துண்டித்து விட்டோம்.
இந்த சம்பவம் குறித்து கார்த்தீகை படத்தின் டைரக்டர் வீராவிடம் பேச முயற்சித்தோம். நம்மிடம் அவர் சிக்கவில்லை. முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், படத்தை தொடங்கும்போது மாளவிகா கர்ப்பமாக இல்லை. இன்னும் 15 நாட்கள் அவர் நடித்து தரவேண்டும். அதற்காகத்தான் நேற்றுமுன்தினம் அவர் படப்பிடிப்புக்கு வந்தார். தயாரிப்பாளர் அவரிடம் முறை தவறி பேசியிருக்கிறார். அதற்காக நானே தயாரிப்பாளரை அழைத்துச் சென்று, மாளவிகாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தேன். இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் மாளவிகா புகார் தெரிவித்தார். நானும் நடந்ததை சரத்திடம் தெரிவித்தேன். அத்துடன் இப்பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால் மாளவிகா திடீரென மும்பை சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இப்படத்துக்கு ரூ. 4 கோடி செலவிடப்படுகிறது. மாளவிகாவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள¢ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிப்போம், என்று கூறியுள்ளார்.
2008-06-20
Today's Special கிளாமர் ஸ்டில் நடிகை பர்சனா
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் கிளாமர் ஸ்டில் நடிகை பர்சனா. படம் 1977. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கர் வாசகர்களே..!
1024X600 சைஸில் தசாவதாரம் 10 அவதாரம் ஸ்டில்ஸ்
தசாவதாரம் படத்தில் இடம்பெற்றுள்ள 10 அவதாரங்களில் நமக்கு கிடைத்த 9 அவதாரங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். துபாயில் உள்ள சிரோன்மணி என்ற வாசகர் தசாவதாரத்தின் 10 அவதாரங்களின் ஸ்டில்களும் மெகா சைஸில் எப்போது வரும் என்று 7 தனிமடல் அனுப்பி விட்டார். அவரது கோரிக்கையை ஏற்று இங்கே தசாவதாரம் 10 அவதாரங்களின் மெகா சைஸ் ஸ்டில்கள். படங்களை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
Subscribe to:
Posts (Atom)