
சிலந்தி டைப் என்றதுமே உங்களுக்கு புரிந்திருக்கும்... இது முழுக்க முழுக்க கவர்ச்சியான படமாகத்தான் இருக்கும் என்று. சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்தியை கருவாகக் கொண்டு சிலந்தி படத்தை புதுமுக இயக்குனர் ஆதி இயக்கினார். இந்த படம் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சூப்பர் ஹிட்.

இதே டைப்பில் அடுத்த வாரம் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் பெயர் தித்திக்கும் இளமை. நரேஷ் நாகா பிக்சர்ஸ் சார்பில் சங்கை சுப்ரமணியம் தயாரிக்கிறார். ஹீரோ தினேஷ், ஹீரோயின்களான நிஷா, அல்தரா மூவரும் நாயகியும் புதுமுகங்கள். லக்ஷயா, மன்சூர் அலிகானும், பாத்திமா பாபுவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் சந்திரமோகன் கூறுகையில், குடும்ப பெண்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட் மற்றும் எம்.எம்.எஸ். மூலம் அனுப்புவதால் ஏற்படும் பிரச்னைதான் படத்தின் கரு. படத்தில் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறோம். ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் போகும் பாதை தவறானது என்பதை சுட்டிக் காட்டவும் இந்தப் படம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்றார்.
இந்த படத்தின் கதையை ஏற்கனவே கோர்ட்டில் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது என்பது கொசுறு தகவல். ரீலிஸ் நேரத்தில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன் ஏற்பாடாம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!