
நடிகை ஒருவரின் முகத்தில் முகப்பரு தோன்றியதால் சினிமா சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்திருப்பது கோலிவுட்டில் அல்ல... பாலிவுட்டில்...!
மகேஷ் பட் தயாரிப்பில் டைரக்டர் விக்ரம்பட் இயக்கிய படம் ராஸ். இதில் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகமான ராஸ் 2 படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. டைரக்டர் மொத்சூரி இந்த படத்தை இயக்குகிறார். ராஸ் பார்ட் 2 வில் நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கிறார்.
இந்த படத்தில் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை கங்கானா தொடர்புடைய ஒரு காட்சி படமாக்கப்படவிருந்தது. இதற்காக நடிகை கங்கானா வந்தார். மேக்கப் முடிந்து கேமரா முன்பு வந்து நின்ற கங்கானாவின் முக்கத்தில் முகப்பரு வந்திருந்தது. இதை கவனித்த டைரக்டர் மொத்சூரி, உடனடியாக சூட்டிங்கை நிறுத்தினார். முகப்பருவுடன் நடிக்க வேண்டாம் என்று கங்கானாவிடம் கூறிய சூரி, பொலிவான முகம்தான் எனக்கு தேவை என்றார். இதுபற்றி கங்கானாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, வெயில் காலம் என்பதால் முகத்தில் முகப்பருக்கள் வந்து விட்டன. டாக்டரிடம் சிகிச்சை பெறப்போகிறேன். முகப்பரு சரியானதும் சூட்டிங்கில் பங்கேற்பேன், என்றார்.
10 comments:
Whoever owns this blog, I would like to say that he has a great idea of choosing a topic.
என்ன கொடுமை சார் இது
'''வால்'''க சனநாயகம்
அந்த படத்துல இருக்கிற பொண்ணு ம்ம்ம்ம்ம்ம்ம் ;-))
குட்டி ஷோக்காகீது பா. மொகத்துள மொகப்பருவயே காணோமே. அப்பாலக்கி ஏம்பா சூட்டிங்க கேன்சலாச்சி.
அடப் பாவிகளா! அத ப்யூட்டி ஸ்பாட்னு சொல்லி ஒரு அழகான சீன வெக்கத் துப்பில்ல, தயாரிப்பாளர் காச இப்டி கரியாக்குறீங்களே! நீங்கல்லாம் அடுத்த பிறவியில சீரியல் டைரக்டராத் தான் பிறப்பீங்க.
தமிழ்நாட்டுக்கு ரொம்ப அவசியம்!!!
இதெல்லாம் ஒரு post. இதுக்கு இத்தனை comments!!!!
என்ன கொடுமை தமிழ்நாடு இது?????
//மங்களூர் சிவா said...
'''வால்'''க சனநாயகம//
வாழுங்கள் மங்களூர் சிவா.
//கிரி said...
அந்த படத்துல இருக்கிற பொண்ணு ம்ம்ம்ம்ம்ம்ம் ;-))//
பாத்துங்க கிரி... ரொம்ப பெருசா பெருமூச்சு விட்டு முகப்பருவை இன்னும் பெருசாக்கிடப் போறீங்க...!
//rapp said...
அடப் பாவிகளா! அத ப்யூட்டி ஸ்பாட்னு சொல்லி ஒரு அழகான சீன வெக்கத் துப்பில்ல, தயாரிப்பாளர் காச இப்டி கரியாக்குறீங்களே! நீங்கல்லாம் அடுத்த பிறவியில சீரியல் டைரக்டராத் தான் பிறப்பீங்க.//
என்ன rapp... நீங்க சாபம் விடுறீங்களா.. வாழ்த்துறீங்களா? ஏன்னா..சினிமாவை விட சீரியலுக்குத்தான் மவுசு அதிகம்னு சமீபத்துல ஒரு சர்வே சொல்லுது.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!