
தனது கன்னக்குழியழகு மூலம் தமிழ் ரசிகர்களை சொக்க வைத்தவர் நடிகை லைலா. இவரது குழந்தைத்தனமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. இப்போது திருமணமாக ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதை கொஞ்ச காலம் தள்ளி வைத்திருக்கிறாராம் லைலா.
கோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்த நேரத்தில் பொதுநல நோக்குடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வந்த நடிகை லைலா, சமீபத்தில் கண்தானம் செய்திருக்கிறாராம். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க லைலா தூது விடுகிறார் என்ற செய்தி கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதுபற்றி விசாரிப்பதற்காக போனில் தொடர்பு கொண்டோம். அப்போது அவர், தூது விட்ட செய்தியை மறுத்தார். மேலும் லைலா கூறுகையில், நான் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறேன். எனது மகனை கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. அவன் இன்னும் பெரியவன் ஆன பிறகு வேண்டுமானால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார்.
வேறு ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டபோது கண்தானம் செய்த விஷயத்தை தெரிவி்த்தார் லைலா. கடந்த மாதம் சுவாமி சுகபோதானந்தா பிறந்த நாளில்தான் லைலா கண்தானம் செய்திருக்கிறார். மும்பையில் உள்ள ஆதித்யா ஜியோத் கண் மருத்துவமனைக்கு கணவர் மற்று்ம் குழந்தையுடன் சென்ற லைலா, கண்களை தானம் செய்தாராம்.
கண்தானம் செய்தபோது எடுத்த படத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன லைலா, நமது இமெயில் முகவரியில் அனுப்பிய படத்தை வாசகர்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளேன்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!