

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தசாவதாரம். இப்படத்தில் கமல் 10 வித்தியாசமான கேரக்டர்களில் தோன்றுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் யாருக்கும் தெரியாத புது விஷயம் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது.
ஆம்! நடிகை நயன்தாராவும் ஒரு படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறாராம். பில்லா படத்தில் நமீதாவுக்கே சவால் விடும் வகையில் நடிகை நயன்தாரா டூ பீஸ் உடையில் தோன்றி அசத்தினார். பில்லாவின் வெற்றியில் நயன்தாராவின் இந்த கவர்ச்சிக்கு பெரிய பங்கு இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பில்லாவுக்கு பிறகு தமிழ் சினிமா உலகில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது. இளைஞர்கள் அவர் நடிக்கும் படங்களில் கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். நயனும் உடை விஷயத்தில் தாராளம் காட்டத் துணிந்து விட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எடுக்கப்பட்டு வரும் படம்தான் சத்யம். வெற்றி நாயகன் விஷாலுடன் நயன்தாரா ஜோடி சேரும் இந்த படத்தில் நயன்தாரா 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார். (இது தசாவதாரம் போல 10 வித்தியாசமான கேரக்டர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது). பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் என்று 10 வேடங்களில் நடித்து அசத்தவிருக்கிறார் நயன்தாரா. அது என்னென்ன வேடம் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.
நிருபரின் டைரியில் இருந்து சத்யம் படத்தின் சிறு முன்னோட்டத்தை பார்க்கலாம்.
சத்யம் படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனர் ராஜசேகர். ஜி.கே.பிலிம்ஸ் சார்பில் விஷாலின் அண்ணன் வி்க்ரம்கிருஷ்ணா (திமிரு படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டியின் கணவர்) படத்தை தயாரித்துள்ளார். ஒரு துணை கமிஷனருக்குள் ஏற்படும் காதலும், அதற்காக ஏற்படும் மோதல்களும்தான் படத்தின் கதை. இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் விஷால். இதற்காக போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபுவிடம் நேரடியாக பயிற்சி பெற்றார் விஷால். இளம் அதிகாரி வேடம் என்பதால் உடலை இரும்பு போல ஆக்குவதற்காக தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி் செய்து வருகிறார்.
நடிகை நயன்தாரா செய்தி வாசிப்பாளர் வேடத்தில் நடித்துள்ளார். அவர் 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி ரசிகர்களை கலகலக்கவும், கிறங்கவும் வைப்பாராம். வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் உபேந்திரா. ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு பா.விஜய், யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு - ராஜசேகர். தோட்டா தரணி பிரமாண்ட செட்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். போலீஸ் அதிகாரி விஷால் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளுக்கு கனல் கண்ணனும், ஸ்டன்ட் சிவாவும் பயிற்சி அளித்துள்ளனர். இந்த படத்தின் சில காட்சிகள் துபாய்யில் எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!