
* நடிகை ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு திரையுலகில் புகுந்து கலக்கி விட்டார். தமிழில் அவர் நடித்து வெளியான முதல் படம் ஜீன்ஸ்.
* ஐஸ்வர்யா ராய் கடந்த 2002ம் ஆண்டு முதன் முதலாக கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். தேவதாஸ் படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டபோது ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியிலில் ஐஸ்வர்யா ராயின் பெயரும் இடம்பெற்று வருகிறது.
* திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக கேன்ஸ் சென்ற ஐஸ்வர்யா ராயுடன், அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சனும் சென்றிருந்தார். (ஆனால் கேமரா கண்கள் ஐஸ்வர்யா ராயை மட்டுமே சுட்டுத் தள்ளியதாம்)
* தற்போது ஐஸ்வர்யாவின் கைவசம் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு பெரும் பெருமை சேர்ப்பதற்கு என்று ஒரு படம் இருக்கிறது. ஆங்கில மொழியில் தயாராகி வரும் அந்த படத்தின் பெயர் பிங் பேரண்ட்ஸ்2. இப்படம் 2009ம் ஆண்டு பிப்ரவரியில் ரீலிஸ் ஆகவிருக்கிறது.
* அதற்கு முன்னதாக ஐஸ் - அபிஷேக், அமிதாப் ஆகியோர் நடித்த இந்திப் படம் ஒன்று திரைக்கு வரவுள்ளது.
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குசேலன் படத்துக்கு பிறகு நடிக்கவுள்ள ரோபோ படத்திலும் ஐஸ்வர்யாராய் தான் ஹீரோயின்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!