
சினிமா உலகில் நடிகர்களுக்கு ஒரு விதி, நடிகைகளுக்கு ஒரு விதி என்பது தெரிந்த ஒன்றுதான். நடிகர்கள் 50 வயதைத் தாண்டினாலும் ஹீரோவாக நடிப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கோ திருமணம் ஆகும் வரைதான் மார்க்கெட். திருமணத்துக்கு பிறகு சினிமா உலகில் மார்க்கெட் இழந்த நடிகைகள் பட்டியலை சேகரித்தால் நீண்டு கொண்டேதான் இருக்கும்.
சரி.. விஷயத்துக்கு வருகிறேன்...! எவ்வளவோ கவர்ச்சி ஆட்டம் போட்டும் நடிகை தியாவுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த படமும் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. எனக்கு தெரிந்து கோடம்பாக்கம் படத்தில் இடம்பெற்ற ரகசியமானது காதல்... மிக மிக ரகசியமானது காதல் என்ற பாடல்தான் தியாவுக்கு ஓரளவுக்கு பெயர் வாங்கித் தந்தது. பாவாடை, தாவணியில் காதலுக்கு மரியாதை ஷாலினி போல திரும்பிப் பார்க்கும் ஸ்டைலை பலரும் ரசித்து பாராட்டினார்கள். படங்கள் எதுவும் ஓடாததால் வாய்ப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தியாவுக்கு ஒரு புதுப்பட வாய்ப்பு கிடைத்தது.
அலையடிக்குது படத்தின் இயக்குனர் காளிமுத்துதாவன் தியா நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் காதல் என்றால் என்ன? இதில் புதுமுக நாயகன் வீரா தியாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் (சில காட்சிகளில் வீராவுக்கு, தியா அக்கா மாதிரிதான் இருக்கும்... கண்டு கொள்ளாதீர்கள்!) இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் காதல் காட்சியன்றில் நடிப்பதற்கு புதுமுக நாயகன் வீரா வெட்கப்பட்டாராம். அப்போது தியா அவருக்கு தைரியம் கொடுத்ததுடன், கிளுகிளுப்பாக நடிப்பது பற்றி ஒரு கிளாசே எடுத்துள்ளார்.
நடிகை தியாவின் கையில் இப்போதைக்கு வேறு படங்கள் எதுவும் இல்லை. இதனால் இதுவேகூட அவருக்கு கடைசி படமாக இருக்கலாம் என்பதால் கவர்ச்சியை கொஞ்சம் கடுமையாகவே காட்டியிருக்கிறாராம். எனது கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்களுக்காக இதை செய்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லும் தியா, ரசிகர்கள் என்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக கவர்ச்சி விருந்து வைக்கப்போகிறேன் என்றும் சொல்கிறாராம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!