
நடிகர் சிம்பு என்ற சிலம்பரசன் மீண்டும் வம்பில் சிக்கப் போகிறார்.
தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வம்பையும் குத்தகைக்கு எடுத்ததுபோல செயல்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சிலம்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் புதுமுக நாயகி சலோனி, சினேகா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தனது அடுத்த கால்ஷீட்டை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட்டுக்கு கொடுத்திருக்கிறார் சிம்பு. போடா, போடி! என்ற தலைப்பில் உருவாகவுள்ள இப்புதிய படத்தை இயக்குபவர் டைரக்டர் விக்கி.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது. மரியாதை குறைவான இந்த தலைப்பை சேம்பர் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சிம்பு படம் என்பதால் இப்படி வம்பு தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது வம்பு தலைப்பு என்பதால் சிம்பு நடிக்கிறாரா? என்பது கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கேள்வி போல முற்றுபெறாமல் சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருக்கிறது.
1 comments:
simbunnale vambhu thane
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!