
ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் திரையுலகே எதிர்பார்க்கும் தசாவதாரம் படம் வருகிற ஜூன் மாதம் 6ம் தேதி ரீலிஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம்.
ஆஸ்கார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். நடிகைகள் அசின், மல்லிகா ஷெராவத் என நட்சத்திர பட்டாளங்களும் இப்படத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
தசாவதாரம் படத்துக்கு பூஜை போட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பல பிரச்னைகள். தடைகள், வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டு வந்தது. தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்துள்ள தசாவதாரம் வருகிற ஜூன் மாதம் 6ம் தேதி வெள்ளித்திரையில் மின்னவுள்ளது. இதனை பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தசாவதாரம் குறித்து ரவிச்சந்திரன் மேலும் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில், 1,000 பிரின்டுகளுடன் கம்பீரமாக வலம் வரவுள்ளது தசாவதாரம். ஒரு தமிழ் படத்துக்கு, இத்தனை பிரின்டுகள் போடப்படுவது இதுவே முதன்முறை. மேலும் ஒரு சாதனையாக, அமெரிக்காவில் 60 சென்டர்களிலும், மலேசியாவில் 70 சென்டர்களிலும், சிங்கப்பூரில் 5 சென்டர்களிலும், இலங்கையில் 25 சென்டர்களிலும், துபாயில் 8 சென்டர்களிலும், லண்டனில் 25 சென்டர்களிலும் என உலகம் முழுவதும் பல்வேறு அதிக எண்ணிக்கையிலான சென்டர்களில் அவதரிக்கிறது தசாவதாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொசுறு தகவல் : ஆஸ்கார் ரவிச்சந்திரன் தனது படங்கள் ரீலிஸ் ஆகும் நாட்களில் அன்னதானம் வழங்குவார். தசாவதாரம் ரீலிஸ் தேதியிலும் சென்னையில் 1000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கவிருக்கிறார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!