
* சூப்பர் நடிகர், கேப்டன் நடிகர், தல நடிகருக்கும், கில்லி நடிகர் என பல முன்னணி நடிகர்களுக்கு என தனியாக பத்திரிகை வெளியாகி வருவது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இப்போது விரல் நடிகர் பெயரிலும் பத்திரிகை ஆரம்பிக்கப் போறாங்களாம். அதுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் தாடி நடிகர் என்று வர்ணிக்கப்படும் தந்தை நடிகர்.
* விஷ்ணு அவதார இயக்குனர் தற்போது சர்வமய படத்தை இயக்குகிறார். அடுத்து இவர் தல நடிகர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை இயக்க அவதார இயக்குனருக்கு 3 கோடி சம்பளம் பேசியிருக்காங்க. ஆனா அவரு 5 கோடி கேட்கிறாராம்.
* நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் நடிகர் சுட்ட ப்ரூட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாட்டாவது மைக் பிடித்து பாட வேண்டும் என்று மைக் நடிகர் ஆசைப்படுகிறாராம். அவரது கோரிக்கையை ஏற்பது பற்றி பரீசிலனை நடந்து வருகிறதாம்.
* கல்யாணத்துக்கு பிறகு திரையை விட்டு விலகிய சிலிம் நடிகை இப்போது சினிமா பக்ககு கரை ஒதுங்கியிருக்கிறார். இதுவரை சொந்தக்குரலில் பேசாத சிலிம், இனி அவர் நடிக்கும் படங்களில் டப்பிங் வாய்ஸ் கொடுக்க முடிவு பண்ணிருக்காராம். சம்பளம் குறைஞ்சிடாம பாத்துக்குறதுக்காகத்தான் இந்த ஏற்பாடாம்.
* செல்வமான இயக்குனரு, ஸ்வீட் கடை நடிகையை காதலித்து கரம் பிடிச்சாரு. இப்போது அவர் காதல் நடிகையுடன் காதல் கொண்டு திரிகிறாராம். இதுபற்றி தெரிந்த ஸ்வீட் கடை நடிகை காதலை நேரிலேயே சந்தித்து திட்டி விட்டாராம். இதனால் செல்வத்துக்கும், ஸ்வீட் நடிகைக்கும் இடையே புகைஞ்சிட்டு இருக்காம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!