
ஒராண்டு தடை முடிந்து மீண்டும் படம் இயக்க வரும் மிருகம் பட டைரக்டர் சாமி இயக்கும் புதிய படத்தில் நடிகை பத்மப்ரியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
கணவரின் தம்பி மீது ஆசை கொள்ளும் அண்ணியைப் பற்றிய உயிர் படத்தை எடுத்தவர் டைரக்டர் சாமி. இவரது இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிருகம் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதி ஹீரோவாகவும், நடிகை பத்மப்ரியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட இந்த படம் டைரக்டர் சாமிக்கு பல சிக்கல்களை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
சூட்டிங்கின்போது சரியாக நடிக்காத நடிகை பத்மப்பிரியாவை, டைரக்டர் சாமி கண்ணத்தில் அறைந்ததும், அதையடுத்து சாமி மீது பத்மப்ரியா புகார் செய்ததும், புகாரின் பேரில் சாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. டைரக்டர் சாமியை பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்க வைத்ததுடன், ஒரு ஆண்டு சினிமா இயக்க தடையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு தடை முடிந்து மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார் டைரக்டர் சாமி. அவர் இடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் சரித்திரம் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் சிலம்பாட்டம் தெரிந்த ஒரு நடிகை தேவைப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிக்க பொறுத்தமானவர் நடிகை பத்மப்ரியாதான் என்று தயாரிப்பு வட்டாரம் நினைக்கிறது. ஏற்கனவே மிருகம் படத்தில் நடிகை பத்மப்ரியா ஆண்களுக்கு நிகராக தென்னை மரத்தில் ஏறி நடித்திருந்தார். இந்நிலையில் சரித்திரம் படத்தில் பத்மப்ரியாவை நடிக்க வைக்க இடி பிலிம்ஸ் நிறுவனத்தினர் முயன்று வருகிறார்கள்.
இதற்கிடையில் பத்மப்ரியா சம்மதித்தாலும், சாமி சம்மதிப்பாரா? என்ற கேள்வியும் கோலிவுட்டின் பரபரப்பு டாக் ஆகி விட்டது. அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் சிலம்பாட்டம் தெரிந்த நடிகைகள் யாரும் இல்லை என்பதால் நாயகி வேட்டையில் இறங்கியிருக்கும் தயாரிப்பு தரப்பு கடும் குழப்பத்தில் இருக்கிறதாம்.
மீண்டும் சாமி படத்தில் நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்விக்கு விடை விரைவில் கிடைத்துவிடும்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!