
உனக்கு 20 எனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்தபோது யாருமே எதிர்பார்க்கவில்லை... இவர் சூப்பர் ஸ்டாரின் ஜோடி ஆவார் என்று. நடிகை ஸ்ரேயா மழை என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிரமாண்ட படமான சிவாஜியில் நடித்தார். தனது இளமை கவர்ச்சியுடன், புன்சிரி்ப்பையும் சேர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஸ்ரேயாவை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன.
சிவாஜி பட நாயகி என்ற அந்தஸ்தை பயன்படுத்தி விஜய்யுடன் அழகிய தமி்ழ் மகன் படத்தில் ஜோடி சேர்ந்தார். சிவாஜியில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயாவை, தனது படத்திலும் ஆட்டம் போட வருமாறு இந்திரலோகத்தில் நா.அழகப்பன் பட தயாரிப்பாளர் அழைப்பு விடுக்க... லம்ப் சம்பளம் கிடைத்ததால் ஓ.கே. சொல்லி விட்டார்.
வடிவேலுவுடன் கெட்ட ஆட்டம் போட்டதால் ஸ்ரேயாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பும் பறிபோனது. தற்போது ஸ்ரேயாவுக்கு விக்ரமுடன் ஜோடி சேரும் கந்தசாமி படத்தை தவிர வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லை.
இதனால் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதால் தனது கொள்கையை தளர்த்தியுள்ளார். சம்பளத்தை குறைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ள ஸ்ரேயா தற்போது சிம்புவுடன் ஜோடி சேர முடிவு செய்து விட்டார். இயக்குனர் ஷக்தி சிதம்பர் சிம்புவை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் ஸ்ரேயாதான் நாயகியாம்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!