
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகைகள் நயன்தாரா, மீனா, நடிகர்கள் பசுபதி, பிரபு, வடிவேலு, சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் குசேலனில் நடித்து வருகிறார்கள்.
குசேலன் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறப்போகின்றன. இந்த பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து முடித்து விட்டார். பாடல் வரிகளை வாலி எழுதியுள்ளார். உதித் நாராயண், சித்ரா, சங்கர் மகாதேவன், தலோர் மெந்தி ஆகியோர் பாடியுள்ளனர். 5 பாடல்களில் முக்கியமான பாடல், சினிமா சினிமா சினிமாதான், எம்.ஜி.ஆரு, சிவாஜி சாரு, என்டி.ஆரு. ராஜ்குமாரு வந்ததிந்த சினிமாதான்... என்று தொடங்கும் வாலி எழுதிய ரஜினியின் அறிமுக பாடல்தான். இந்த பாடலுக்கான சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. இன்னொரு பாடல் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களான பொல்லாதவன், முரட்டுக்காளை, ராஜாதி ராஜா படங்களின் பெயர்களை குறிப்பிட்டு பெருமை பொங்க பாடும் பாடல். இந்த பாடல் ஓம் சாரிரே சாரே சாரே போக்கிரி ராஜா போல்லாதவன் நீதான் சாரே சாரே... என தொடங்குகிறது. இந்த பாடலில்தான் சூப்பர் ஸ்டார் 20 கெட்டப்களில் வந்து அசத்தப்போகிறார்.
பாடல் கம்போசிங் வேலைகள் முடிந்ததைத்தொடர்ந்து கேசட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுப்பதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. குசேலன் படம், தெலுங்கிலும் தயாராவதால் 2 ஆடியோ வெளியீட்டு விழாவையும் ஒன்றாக வைத்து விடலாமா என்றும் யோசித்து வருவதாகவும் ஒரு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொசுறு : குசேலன் படத்தை ஜூலை 15ம் தேதி திரையிட முடிவு செய்து அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.
2 comments:
சூப்பர் ஸ்டார் நடிச்சாலே படம் ஹிட் ஆயிடும். சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார்னா சும்மாவா பாஸூ. எங்கள் தலைவர் பற்றிய புதுப்புது செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் சினிமா நிருபருக்கு பாராட்டுக்கள். தங்கள் வலைப்பூ மேலும் விரிய வாழ்த்துகிறாம். சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் இரு பாடல்களை கொடுத்திருப்பது சூப்பரப்பு...!
- சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்
nethu (Yesterday) intha CINEMA NIRUBAR... Supar stara pathi uru news pottare...! Atu nallathaan irunthuthu. aanaa... Nirubar Kindal panraro nu thonuthu.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!