
சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த் நடித்த சிவாஜிக்கு பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ரோபோவுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். ஐங்காரன் இன்டர்நேஷனல் மற்றும் ஈரோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாயை தாண்டும் என்று தெரிகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பவர் முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் உருவாகவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி விட்டன. தற்போது ரஜினிகாந்த் குசேலனில் தனது பங்கு காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இதையடுத்து ரோபோ பட வேலைகளில் இறங்கியிருக்கு ரஜினிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை உருவாக்கியிருக்கிறார்களாம். சிவாஜி படத்தில் கறுப்பு ரஜினி எப்படி வெள்ளைக்கார ரஜினியாக மாற்றப்பட்டாரோ... அதேபோல் ரோபோவில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் பெரிதும் பேசப்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கொசுறு தகவல் : ரோபோ படம் ஹாலிவுட்டுக்கு இணையான படமாக இருக்கும் என்று சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!