
ஐயா படத்தில் குடும்ப பெண்ணுக்கான அத்தனை லட்சணத்துடனும் தோன்றிய நயன்தாரா, தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாதை அமைத்து செயல்பட்டு வருகிறார். நயன்தாராவுக்கும், கவர்ச்சிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று அவர்களது ரசிகர்களே எண்ணிக் கொண்டிருந்த வேளையில் திடீரென டூ பீஸ் உடையில் தோன்றி பலரை முகம் சுழிக்க(?) வைத்தவர் இந்த நயன். இந்த டூ பீஸ் எல்லாம் தனது முன்னாள் காதலன் சிம்புவை வெறுப்பேற்றுவதற்காகத்தான் என்று ஒருபுறம் பத்திரிகைகள் கிசுகிசுக்க, முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ளத்தான் இப்படியொரு கவர்ச்சி என்று கோலிவுட் வட்டாரம் பரபரக்க... சத்தமில்லாமல் சூப்பர் ஸ்டாருடன் குசேலன், அஜித்துடன் ஏகன், விஜய்யுடன் ரீமேக் சோல்ஜர், விஷாலுடன் சத்யம் என பல படங்களில் நடிக்க வாய்ப்பை கைப்பற்றியிருக்கிறார் நயன்தாரா.
சரி... விஷயத்துக்கு வருவோம்...! நயன்தாராவுக்கு சாமி பக்தி ரொம்பவே அதிகம். அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா படம் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தின் சூட்டிங்கின்போது திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனால்தான் தமிழில் தனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது என்பதை செண்டிமென்ட்டாக இன்று வரை நம்புகிறார் நயன்தாரா.
இந்நிலையில் கடந்த வாரம் சத்யம் படத்தின் பாடல் காட்சிக்காக நெல்லை மாவட்டம் தென்காசிக்கு வந்த நயன்தாரா, நெல்லையப்பரை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து சூட்டிங் முடிந்ததும் கார் மூலம் திருநெல்வேலி சென்ற நயன்தாரா, நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று மனமுருக வேண்டிக் கொண்டார். நல்லவேளை ரசிகர்களின் கண்களில் நயன்தாரா சிக்கவில்லை என்கிறார் அவரது மேனேஜர்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!