
சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு டைரக்டர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இணையும் படம் ரோபோ. ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரமாண்டமாக இருக்கும் என்று உலக திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
தற்போது ரஜினிகாந்த் குசேலன் படத்தின் தான் பங்குபெறும் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இதையடுத்து ரோபோ படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன. இந்த படம் ரஜினிகாந்தி வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என்று டைரக்டர் ஷங்கர் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனை உறுதிசெய்யும் வகையில் ரோபோ பற்றிய செய்திகள் தினம் தினம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னையின் பிரபல போட்டோகிராபர் ஜி.வெட்கட்ராம் ரோபோ படத்துக்கான ஸ்டில்களை எடுத்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று போஸ் கொடுத்தார். அந்த படங்கள் அனைத்து சாதாரண ரஜினிகாந்த். அதாவது படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் நடிகர் ஆவதற்கு முன்பு இருக்கும் காட்சிதான் எடுக்கப்பட்டதாம். சூப்பர் ஸ்டார் நடிகர் ஆன பின் பல வெளிநாடுகளுக்கு சென்று பல நடிகைகளுடன் ஆடிப்பாடும் காட்சிகளும் ரோபோ படத்தில் உள்ளது. இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை பயன்படுத்தவிருக்கிறார்கள். ரஜினியின் மேக்கப்பிற்கு மட்டும் ரூ. 30 கோடி வரை செலவிடவிருக்கிறார்களாம்.
இதுபற்றி படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஐங்காரன் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரோபோ படத்துக்கு ரூ.100 கோடி செலவழிக்க முதலில் திட்டமிடப்பட்டது. இப்போது மேலும் சில கோடிகள் தேவைப்படும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும், என்றார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!