
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் குசேலன். இந்த படம் கதபறயும் போள் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
குசேலன் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது குசேலனுக்கு புதுப்பொலிவு கொடுத்ததே ரஜினிகாந்த் தான் என்ற தகவல் வெளியிகியிருக்கிறது. இதுபற்றி மலையாளத்தில் கதபறயும்போள் படத்தின் கதையை எழுதிய ரஜினியின் நண்பர் நடிகர் சீனிவாசன் கூறுகையில், மலையாள படத்தை விட தமிழில் குசேலன் புதுப்பொலிவுடன் இருக்கும். இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மலையாளத்தில் நான் நடித்த பார்பர் கேரக்டரில் பசுபதி நடித்து வருகிறார். அவருக்கு இந்த படம் நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். ஆரம்பத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில்தான் நடிப்பார் என்று நினைத்தார்கள். படத்தின் கதையை கேட்க கேட்க ரஜினியே பல மாற்றங்களை செய்து ரொம்ப இன்வால்மெண்ட்டுடன் நடிக்கத் தொடங்கி விட்டாராம். இதை அவரே என்னிடம் போனில் தெரிவித்தார், என்றார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!