
நடிகை ஒருவர் விரித்த காதல் வலையில் சிக்கிய அறிமுக நடிகருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் திலகத்தின் வாரிசு என்று கூறி நடிகர் திலகத்தின் பெயரிலேயே திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் சிவாஜி. சிங்கக்குட்டி என்ற படத்தில் இவரது நடிப்பு எடுபடவில்லை. மாளவிகாவின் எடுப்பான ஆட்டமும். விவேக்கின் மிடுக்கான காமெடியும்தான் படத்தை ஓரளவு நகர்த்தி சென்றது.
இந்த நிலையில் சிங்கக்குட்டி நடிகரைப் பற்றிய செய்திகள் கோடம்பாக்கத்தில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. சிங்கக்குட்டி நடிகர் சிவாஜிக்கு, குத்தாட்ட நடிகையான சுஜாவுக்கும் இடையே காதல் என்ற செய்திதான் அது. இதுபற்றி விசாரிப்பதற்காக இருவரையும் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போய்விட்டது. இந்த வயசுக் காதலால் நடிகர் திலகத்தின் குடும்பமே சோகத்தில் இருப்பதாக தகவல்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!