
டென்னிஸ் உலகின் இளம்புயல் என்று வர்ணிக்கப்படும் சானியா மிர்சா சினிமா உலகிலும் கால்பதிக்கவுள்ளார்.
பெரும்பாலான இளசுகளுக்கு டென்னிஸ் ஜுரம் வருவதற்கு காரணமாக இருப்பவர் சானியா மிர்சா. சின்னத்திரையில் மட்டும் இவரது (டென்னிஸ்) ஆட்டத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள், இனி பெரிய திரையிலும் ரசிக்கப் போகிறார்கள். சானிமா டென்னிஸ் களத்தில் குதித்து பிரபலமானதும் நம்ம ஊர் இளம் நாயகர்களின் ஒருவரான சிம்பு, தனது படத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அம்மணி சாரி... சொல்லி அனுப்பி விட்டார். இதையடுத்து விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கிய சானியா மிர்சா, இப்போது சினிமா உலகிலும் கால் பதிக்க சம்மதித்துள்ளார்.
ஆம்! சானிமா மிர்சா முதன் முதலாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சானியா. சானியா மிர்சா இந்த படத்தில் தோன்றுவது வெறும் 5 நிமிடங்கள்தான் என்பது வருத்தமான செய்தி என்கிறபோதிலும், விரைவில் அவர் கதாநாயகியாக களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தெலுங்கு திரையுலகம்.
1 comments:
THALIVI SANIYA MIRZA PADAM PODU THALIVA...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!