
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர எத்தனையோ நடிகர்கள் துடித்து வரும் நிலையில் சீயான் விக்ரமுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. தற்போது கந்தசாமி படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒர படத்தில் நடிக்கிறார். அந்த படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க விக்ரம் சம்மதித்திருக்கிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பவர் ஐஸ்வர்யா ராய். நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என்று பிஸியாக இருக்கிறார். விரைவில் தொடங்கவிருக்கும் ரோபோ படத்திலும் ஐஸ்வர்யா ராய்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாயகி. இதனையடுத்த டைரக்டர் மணிரத்னம் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
1 comments:
என்ன நிருபர்... சீயான் விக்ரமோட ஐஸ்வர்யா ராய் ஜோடி சேருகிறார்னு போடுறதுக்கு பதிலா ஐஸ்வர்யா ராயுடன் சீயான் ஜோடி சேருறார்னு போட்டுருக்கீங்க...! இதை வன்ன்ன்ன்மையாக கண்டிக்கறேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!