
தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல... திரையுலகினரே ஆச்சர்யப்படும் நடிகை ஒருவர் இருக்கிறாறென்றால் அது நமீதாவாகத்தான் இருக்க முடியும். சக நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு இவரது மலைபோன்ற உடல் தோற்றலும், இவ்வளவு பெரிய உடலை வைத்துக் கொண்டு இவர் போடும் ஆட்டமும் பலரையும் கவர்ந்து இழுக்கிறது.
இந்த நிலையில் நமீதாவைப் போல உடலை மாற்ற வேண்டும் என்கிற ஆசையில் நடிகை சினேகா அழகு சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். பாண்டி படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது, படத்தை பார்த்த சினேகாவின் சினேகிதிகள், நமீதாவைப் பார்... உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார். உன் உடன் தொளதொளவென்று இருக்கிறதே... என்று கிண்டலடித்தார்களாம். இதில் கிறங்கிப்போன சினேகா உடலை எப்படியாவது நமீதா போல ஆக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
தற்போது அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சினேகா அங்கு அழகு சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறாராம். அதேநேரத்தில் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கேன்வாசும் செய்து வருகிறாராம்.
4 comments:
நிருபர் வலைப்பூவின் செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!
புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையா இருக்கே.
//உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார். உன் உடன் தொளதொளவென்று இருக்கிறதே.//
ஹா ஹா ஹா ஹா ஹா
:)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!