
இன்றைய இளம் நாயகர்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் பெஸ்டாக இருக்கிறார் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
குசேலன் படம் குறித்து நடிகை நயன்தாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குசேலன் படத்தில் நான் ஒரு நடிகையாகவே நடிக்கிறேன். இதைத்தவிர வேறு தகவல் எதுவும் இப்போது சொல்ல முடியாது. படம் அடுத்த மாதம் ரீலிஸ் ஆகிறது அப்போது பார்த்து ரசியுங்கள். இந்த நேரத்தில் ரஜினிகாந்த் சாரை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே நான் அவருடன் சந்திரமுகி படத்தில் நடித்தேன். அப்போது நான் இந்த பீல்டுக்கு வந்த புதிது. சினிமா பற்றிய நாலெட்ஜ் அதிகம் இல்லாமல் இருந்தபோது அவர்தான் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். இப்போது குசேலன் சூட்டிங்கிலும் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
குறிப்பாக அவரது எளிமை என்னை கவர்ந்து இழுக்கிறது. எல்லோரிடமும் சகஜமாக பழகும் அவரது மன நிலை பிடித்திருக்கிறது. இன்றைய இளம் ஹீரோக்களைவிட ரஜினிகாந்த் சார்தான் பெஸ்ட். சிலர் ரஜினி சாருடன் ஜோடியாக நடிப்பது பற்றி கூறுகையில் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ரஜினி சாருடன் அடுத்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கினேன். குசேலன் வாய்ப்பு கிடைத்தது. டைரக்டர் பி.வாசு சார் என்னை அழைத்து ரஜினி சாருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. படம் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த சந்தோஷம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
4 comments:
உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே...!
நயன்தாரா சர்டிபிகட்லாம் எங்க தலைவருக்கு தேவயில்ல நிருபரே
சூப்பர் ஸ்டாருக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. இருப்பினும் சர்டிபிகேட் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி.
நயன்தாரா வாழ்க
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!