
இனி ஆக்ஷன் அவதாரம் மட்டுமே எடுக்கப்போவதாக நடிகர் பரத் அறிவித்துள்ளார்.
ஒன்றிரண்டு படங்கள் ஓடிவிட்டாலே அதிரடி அறிவிப்பு என்கிற பெயரில் தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளும் அறிவிப்புகளை பல நடிகர்களின் பட்டியலில் நடிகர் பரத்தும் இணைந்துள்ளார். ஆம்..! இனி அவர் காதல் கதை உள்ள படங்களில் நடிக்க மாட்டாராம். ஒன்லி ஆக்ஷன் என்கிறார் காலரை தூக்கிக் கொண்டு. இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறுகையில், தற்போது நான் ஹரி இயக்கத்தில் சேவல், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம், பேரரசு இயக்கத்தில் திருத்தணி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த 3 படங்களுமே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். இனி நான் காதல் வட்டத்துக்குள் சிக்காமல் ஆக்ஷனில் கலக்கவிருக்கிறேன், என்றார். பரத் & பூர்ணா (சின்ன அசின்) நடிப்பில் உருவாகியுள்ள முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் காதல் ப்ளஸ் ஆக்ஷன் நிறைந்த படமாம்.
சின்ன அசின் படத்தை பார்த்த இங்கே சொடுக்கவும்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் வாசகர்களே...!
சின்ன அசின் படம் சூப்பர் நிருபரே
சின்ன பையங்கல்லாம் ஆக்ஷன் ஹீரோவா நடிக்கிறாங்க. அத பாக்குற நம்மள முட்டாளுன்னு நெனச்சிட்டாங்களா?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!