
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த குசேலன் படத்தை தொடர்ந்து நடிக்கவிருக்கும் ரோபோ படம் தாமதமாகத்தான் தொடங்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் நடித்தார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மெகா ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து ரஜினி&ஷங்கர் கூட்டணியில் மேலும் ஒருபடம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. டைரக்டர் ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் நடிக்க ரஜினிகாந்தும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரோபோ படத்துக்கான பணிகள் தொடங்கின.
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கால்ஷீட் கேட்டனர். அவரும், ஏற்கனவே முன்பொரு முறை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். ரோபோவில் கண்டிப்பாக நடித்து கொடுக்கிறேன் என்று டைரக்டர் ஷங்கரிடம் தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ரோபோவில் பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின.
இதற்கிடையில்தான் ரஜினிகாந்தின் சினிமா உலக குரு பாலசந்தர், தனது கவிதாலயா நிறுவனத்துக்காக ஒரு படம் பண்ணிக் கொடுக்குமாறு ரஜினியிடம் கேட்டார். குரு சொல்லை தட்டமுடியாத ரஜினியும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படம்தான் குசேலன் என்ற பெயரில் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அசோக்குமார் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார்.
குசேலன் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ரோபோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ரோபோவுக்கு முன்பு மேலும் ஒரு படத்தில், அதுவும் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் கோலிவுட்டில் கசியத் தொடங்கி விட்டன. இதுபற்றி டைரக்டர் வாசுவிடம் கேட்டதற்கு, ரஜினிகாந்த் எனது இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிப்பது உறுதி. அது ரோபோவுக்கு முன்பா அல்லது ரோபோவுக்கு பிறகா? என்பதை ரஜினிகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ரஜினிகாந்த் வட்டாரத்தில் விசாரிக்கையில், ரோபோ படம் பிரமாண்ட படம் என்பதால் படத்தை எடுத்து முடிக்க குறைந்தது 8 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம். எனவே அதற்கு முன்பாகவே வாசு படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்து விடுவார் என்று தெரிவித்தனர். இதனால் சினிமா உலகமே பிரமிக்கும் வகையில் உருவாகவிருப்பதாக டைரக்டர் ஷங்கர் கூறி வரும் ரோபோ படம் தொடங்குவது மேலும் தாமதம் ஆவது உறுதியாகியுள்ளது. புதிய படம் குறித்த அறிவிப்பை குசேலன் படம் வெளியானதும் ரஜினிகாந்த் உறுதி செய்வார் என தெரிகிறது.
7 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே...!
Yutarets! kasagad bah!
நல்ல செய்தி. வாழ்த்துகள்
எத்தனை வருஷம் கழிச்சு ரோபோ வரும் நிருபரே?
gooood :-)
சூப்பர் ஸ்டார் செய்திகளை அதிக அளவில் கொடுக்கிறீர்கள் நிருபரே. வாழ்த்துகள். நீங்கள் நிருபர் என்பதால் எங்களுக்கு நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. நன்றி நிருபரே.
//SUTHA said...
சூப்பர் ஸ்டார் செய்திகளை அதிக அளவில் கொடுக்கிறீர்கள் நிருபரே. வாழ்த்துகள். நீங்கள் நிருபர் என்பதால் எங்களுக்கு நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. நன்றி நிருபரே.
//
நன்றி சுதா...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!