
தசாவதாரம் படத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தசாவதாரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமானுஜ தாசர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தசாவதாரம் படத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். படத்தை பார்க்காமலேயே இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், படம் வெளிவந்த பிறகு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வழக்கு தொடரலாம் என்றும் கூறியுள்ளனர்.
3 comments:
எத்தனை வழக்குகள் போட்டாலும் உலக நாயகனை அசைச்சுக்கவே முடியாதுன்னு நிரூபிச்சிட்டு தசாவதாரம். செய்திகளை சுடச்சுட தரும் சினிமா நிருபருக்கு ஒரு ஒ போடுங்கப்பா...!
//செய்திகளை சுடச்சுட தரும் சினிமா நிருபருக்கு ஒரு ஒ போடுங்கப்பா...!
//
நன்றி கமல்பித்தன்...!
ஒன்னு என்ன ஒன்பது போடுறோம்
ஓஓஓஓஓஓஓஓஓ
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!