
பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்தமைக்காக நடிகை ப்ரியாமணிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ப்ரியா மணி ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தெலுங்கு பட சூட்டிங்கில் இருக்கிறார். அவர் போனில் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
எனக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா உலகில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த மதிப்புக்கும், மரியாதைக்கும் காரணமானவர் டைரக்டர் அமீர்தான். அவருக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனது குரல் கரகரவென இருப்பதால் பருத்தி வீரனில் டப்பிங் பேசமாட்டேன் என்று சொன்னேன். அமீர் சார்தான் என்னை வற்புறுத்தி பேச வைத்தார். அதனால்தான் இந்த விருது கிடைத்துள்ளது. அமீர் சாருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ப்ரியா மணி கூறினார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!