
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த பில்லா ஆகிய படங்களின் பாணியில் நடிகர் தனுஷ் படம் உருவாகவிருக்கிது. சிவாஜியில் ரஜினியும், பில்லாவில் அஜித்தும் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதுடன், ஹெலிகாப்டர் இறக்கை காற்றில் பந்தாவாக நடந்து வந்து ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றார்கள்.
இந்த வரிசையில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் ரீமேக் படிக்காதவன் படத்திலும் ஹெலிகாப்டர் காட்சி இடம்பெறப் போகிறது. இதற்காக ஐதராபாத்தில் இருநு்து நவீன ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இரண்டு நாட்கள் சூட்டிங்கில் பங்கேற்ற ஹெலிகாப்டருக்கு வாடகை மட்டும் ரூ.18 லட்சமாம். தனுஷ் படத்திற்கு, இரண்டே நாள் சூட்டிங்கிற்கு ரூ.18 லட்சம் செலவழித்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ரீமேக் பில்லா போல ரீமேக் படிக்காதகவனும் பேசப்படும் என்கிறார் படத்தின் இயக்குனர் சுரஜ்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை தமன்னா என்பது கொசுறு தகவல்.
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான்...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!