பட அதிபர் செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று மாளவிகா புகார் கூறதையடுத்து அவரை கார்த்தீகை படத்தில் இருந்து நீக்கி படத்தின் இயக்குனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா கார்த்தீகை என்ற படத்தில் நடிப்பதாக திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தமானார். அவர் தொடர்பான காட்சிகளிலும் கொடுத்த தேதிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் மாளவிகாவுக்கு திருமணம் நடந்தது. தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா, கார்த்தீகை படத்தில் நடிக்க முடியாது என்று கூறி வந்தார். இதையடுத்து படத்தின் டைரக்டர் வீரா, கொஞ்சாத குறையாக அவரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். பாடல் காட்சி சூட்டிங்கில் கடினமான நடன அசைவுகள் இருந்ததால், அதில் நடிக்க முடியாது என்று மாளவிகா மறுத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த படஅதிபர் ஆஞ்சநேயலு மாளவிகா இருந்த கேரவனுக்குள் சென்று, நீ கர்ப்பமா, இல்லையா என்று வயிற்றை தொட்டுப் பார்க்கிறேன் என கூறி தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி நடிகை மாளவிகா நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் செய்ததுடன், குழந்தை பிறந்த பிறகே கார்த்தீகை படத்தில் நடிப்பேன் என்று கூறிவிட்டு மும்பைக்கு சென்று விட்டார். இதையடுத்து படஅதிபர் நஷ்டஈடு கேட்டு 2 வழக்குகள் போடுவேன் என்று மிரட்டினார். என்ன வந்தாலும் பரவாயில்லை; சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லி வந்தார் மாளவிகா.
இந்நிலையில் தற்போது மாளவிகா மீது நடவடிக்கை எடுத்துள்ளார் டைரக்டர் வீரா. இது குறித்து இயக்குனர் வீரா கூறுகையில், மாளவிகாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகை நடிக்கிறார். நஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய மாளவிகா மீது ரூ.75 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம், என்றார்.
1 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!