


நயன்தாரா உடலில் ஆத்தா புகுந்து விட்டதாக சினிமா சூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று சத்யம். இந்த படத்தில் வெற்றி நாயகன் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா கவர்ச்சியிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறாராம். படத்தில் தெய்வலட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவுக்கு டி.வி. சேனலில் பயிற்சி நிருபர் வேலை. அவர் வசிக்கும் அபார்ட்மெண்டில் செம லூட்டி அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த லூட்டியில் ஒன்றுதான் அம்மன் அருள் வந்து ஆடுவது போன்ற காட்சி. இந்த காட்சியில் நயன்தாரா ரொம்பவே இயல்பாக நடித்தார். அவரது நடிப்பை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அசந்து போய்விட்டார்கள்.
ஆத்தா வேடம் போட்டு ஆடிய பிறகு கேரவனுக்கு வந்துள்ளார் நயன்தாரா. அடுத்த ஷாட்டுக்காக டைரக்டர் அழைக்க... அப்போது திடீரென நயன்தாரா சாமி வந்து ஆடியதுபோல ஆடினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஒருசிலர் பயந்து விட்டனர். அதன்பின்னர் ரிலாக்ஸ் ஆன நயன்தாரா..., எல்லோரும் ஏமாந்துட்டீங்களா? என்ற கூறி விழுந்து விழுந்து சிரித்தார். சூட்டிங்கில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு அடங்கி, சிரிப்பலையில் மூழ்கியது. நயன்தாரா ஆத்தா வேஷம் போட்டு ஆட்டம் போட்ட படங்களைத்தான் மேலே படத்தில் பார்க்கிறீர்கள்.
7 comments:
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் சினிமா செய்திகள் ரசித்து படிக்கும்படியாக இருக்கிறதா? என்பதை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...!
goooooooooooooood nirubar
கும்பிட போன தெய்வம் மாதிரி ஒரு குத்து இருக்குன்னு சொல்லுங்க
ஆத்தா நல்லாவே இருக்குதுங்கோ...
//முரளிகண்ணன் said...
கும்பிட போன தெய்வம் மாதிரி ஒரு குத்து இருக்குன்னு சொல்லுங்க//
அந்த அளவுக்கு குத்து இருக்காது முரளிகண்ணன்.
ஆத்தா.. இதுக்கு பின்னூட்டம் போடற என்னையும் சேர்த்து மன்னிச்சுடு ஆத்தா :)
//ஆத்தா.. இதுக்கு பின்னூட்டம் போடற என்னையும் சேர்த்து மன்னிச்சுடு ஆத்தா :)//
இதுக்கு ரிப்பீட்டே போடுற என்னையும் சேர்த்து மன்னிச்சுடு ஆத்தா ;)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!