
சிலந்தி என்ற படத்தில் கவர்ச்சியால் பட்டையை கிளப்பிய நடிகை மோனிகாவுக்கு அடுத்த ஜாக்பாட் அடித்துள்ளது. மாலைமுரசு பத்திரிகையில் சினிமா நிருபராக பணியாற்றிய அனுபவத்துடன் சிலந்தி என்ற படத்தை ஆதி இயக்கினார். எந்த டைரக்டரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் சினிமா நுணுக்கங்களை தெரிந்துகொண்டு நேரடியாக டைரக்டர் ஆன ஆதி, சிலந்தி படத்தில் மோனிகாவில் கிளுகிளு மேனியை காட்டி வெற்றி பெற்றுவிட்டார்.
தமிழில் மோனிகாவின் கவர்ச்சி பிரியாணியை, தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து படைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் ஆதி. இதற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் ஆதி, விரைவில் டப்பிங் பணிகள் தொடங்கும் என்கிறார். இதற்கிடையில் சிலந்தி படத்தை டிஜிட்டல் பார்மேட்டில் இருந்து, பிலிம் பார்மேட்டுக்கு மாற்றி 40 பிரிண்ட் போட்டு தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்வதற்கான வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது.
3 comments:
Suuuupparappu!
மோனிகா இப்போ எங்கே இருக்கிறார் நிரபர்
மோனிகா வாழ்க!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!