2008-11-02
இரண்டு கிலோ எடை குறைந்தார் நமீதா
நமீதா என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது பிரம்ம்மாண்ட உடலழகுதான். அவர் தனது எடையை குறைக்க பலகட்ட முயற்சி எடுத்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனாலும் அவரது உடல் எடை குறைந்தபாடில்லை என்ற செய்திகளும் வெளியாவது வழக்கம். இப்போது ஜகன் மோகினி படத்தில் நடித்து வரும் நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு காரணம் படத்தில் நமீதாவுடன் இன்னொரு நாயகியாக நடிகை நிலா நடிப்பதுதானாம். நிலா தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக தோன்றுகிறார். ஆனால் நமீதா குண்டாக இருக்கிறார். இருவதும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் நமீதாவின் பிரமாண்ட உருவம் கொஞ்சம் ஓவராகவே தெரி்ந்ததாம். இதனால் தனது எடையை குறைக்கும் வேலைகளில் இறங்கிய நமீதாவுக்கு கைமேல் பலனாக 2 கிலோ குறைந்திருக்கிறதாம்.
2008-10-31
காதலில் விழுந்தேன் நகுல் எக்ஸ்குளூசிவ் பேட்டி
பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், ஜெனிலியா உள்ளிட்ட புதுமுகங்கள் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த் தமிழில் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டு தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கி விட்டார். பரத் காதல், வெயில் என்று தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி இடத்துக்கு வந்து விட்டார். மணிகண்டனுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. நகுல் என்ற நகுலனுக்கு திறமை இருந்து கூடவே எடையும் அதிகமாக இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.
பாய்ஸ் படத்தில் நடித்தபோது நகுலின் எடை 108 கிலோ. நடிகை தேவயானியின் சகோதரரான இவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதற்கு உடல் எடை ஒரு பெரிய தடையாகவே இருந்தது. அந்த நேரத்தில்தான் தனது சகோதரி தேவயானி மற்றும் அவரது கணவர் டைரக்டர் ராஜகுமாரன் ஆகியோரது ஆலோசனைப்படி எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. 108 கிலோ எடை 73 கிலோ ஆனது. அதன் பின்னர்தான் காதலில் விழுந்தேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கிறார் நடிகர் நகுல். அவரது எக்ஸ்குளூசிவ் பேட்டி வருமாறு :
கிட்டத்தட்ட 35 கிலோ எடையை குறைத்தது எப்படி?
பாய்ஸ் படத்திலல் நடித்தபோது என்னுடன் நடித்தவர்கள் எல்லாம் ஒல்லியாக இருந்தார்கள். நான் குண்டான தோற்றத்துடன் தனியாக தெரிந்தேன். படத்தை பார்த்து விட்டு என் குடும்பத்தில் உள்ளவர்களே உடலை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனால் உடலை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கடுமையான டாக்டரின் ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தேன். சாக்லேட், ஐஸ் க்ரீம், அரிசி சாதம் உள்ளிட்டவைகளை குறைத்துக் கொண்டேன். நல்ல உடற்பயிற்சியும் செய்தேன். மொத்தத்தில் முடியும் என்று நினைத்தேன். உடல் எடையை குறைத்து விட்டேன்.
ஹீரோ ஆனது பற்றி?
ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்தது. என் அத்தான் ராஜகுமாரன் என்னை ரொம்பவே ஊக்குவிப்பார். 'நான் மட்டும் பெரிய டைரக்டரா இருந்தா உன்னை வச்சு படம் எடுப்பேன் அடிக்கடி சொல்வார். அவர்தான் எனக்கு காதல், ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கவும், டயலாக் பேசவும், பாடி லாங்குவேஜ் காட்டவும் பயிற்சி கொடுத்தார். ஒரு ஹீரோவுக்கான தகுதிகள் என்னென்ன என்று கற்றுக் கொடுத்ததுடன் என் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என் அக்காவுக்கும், அத்தானுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காதலில் விழுந்தேன் வெற்றியை எதிர்பார்த்தீர்களா?
காதலில் விழுந்தேன் படத்தை முதலில் அட்லாண்டிக் சினிமாஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை வாங்கி விளம்பரப்படுத்தியது. சன் குழும நிறுவனங்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தால் இன்று பட்டிதொட்டியெங்கும் காதலில் விழுந்தேன் படத்துடன் நானும் பிரபலமாகியிருக்கிறேன்.
அடுத்து பட வாய்ப்புகள் வந்துள்ளதா?
காதலில் விழுந்தேன் ஹிட் ஆனதால் எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையுள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது அக்கா தேவயானி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளேன் என்கிறார் நகுல்.
2008-10-20
2008-09-11
ரஜினி அரசியலுக்கு வர அஸ்திவாரம்? சிறப்பு கட்டுரை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இது ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைய அஸ்திவாரம் போடும் கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
1996ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றார். இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை வெறுப்பேற்றியதால், ரஜினிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அரசியலுக்கு நேரடியாக வர விரும்பாத ரஜினிகாந்த், அப்போதைய தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா., மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். சைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியனுக்கும் ஒட்டு போடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ரஜினிக்காக எதையும் செய்யத்துணிந்த ரசிகர்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை படுதோல்விக்கு தள்ளினார்கள். ரஜினியின் வாய்ஸ்க்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை 1996 சட்டமன்ற தேர்தல் நிரூபித்தது. அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டு என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. ரஜினியும் பாட்ஷாவுக்கு பிறகு வந்த முத்து, அண்ணாமலை, படையப்பா என பல படங்களில் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களை பேசி கைத்தட்டல் பெற்றார். இருப்பினும் அரசியல் குறித்து எந்தவித தெளிவான பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இன்று வரை அவரது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ரஜினிக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியான பேட்டியொன்றை கொடுத்தார். சிகரெட் பிடிப்பது தொடர்பாக பேட்டியளித்த அவர் ரஜினியை நேரடியாகவே தரக்குறைவாக விமர்சித்தார். பாபா படத்தை ஓட விடாமல் செய்வோம் என்று பாமகவினர் தெரிவித்தனர். அப்போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரினார்கள். ஆனால் ரஜினி தெடர் மவுனியாகவே இருந்தார். பாபாவும் படு பிளாப்பானது. அந்த நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசினார். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று நேரடியாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழ் திரையுலகமே கர்நாடகாவை கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தினர். அதில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத மேடையில் பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அந்த நேரத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழ் தியேட்டர்கள் நொறுக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய ரஜினி, கலவரத்தை உண்டு பண்ணுகிறவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசமாக பேசினார். (பிறகு அதற்கு மன்னிப்பு கேட்டது தனி கதை).
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரம் அமைக்கும் கூட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில்தான் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி அரசியலுக்கு வர அஸ்திவாரம்? சிறப்பு கட்டுரை
1996ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றார். இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை வெறுப்பேற்றியதால், ரஜினிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அரசியலுக்கு நேரடியாக வர விரும்பாத ரஜினிகாந்த், அப்போதைய தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா., மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். சைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியனுக்கும் ஒட்டு போடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ரஜினிக்காக எதையும் செய்யத்துணிந்த ரசிகர்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை படுதோல்விக்கு தள்ளினார்கள். ரஜினியின் வாய்ஸ்க்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை 1996 சட்டமன்ற தேர்தல் நிரூபித்தது. அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டு என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. ரஜினியும் பாட்ஷாவுக்கு பிறகு வந்த முத்து, அண்ணாமலை, படையப்பா என பல படங்களில் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களை பேசி கைத்தட்டல் பெற்றார். இருப்பினும் அரசியல் குறித்து எந்தவித தெளிவான பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இன்று வரை அவரது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ரஜினிக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியான பேட்டியொன்றை கொடுத்தார். சிகரெட் பிடிப்பது தொடர்பாக பேட்டியளித்த அவர் ரஜினியை நேரடியாகவே தரக்குறைவாக விமர்சித்தார். பாபா படத்தை ஓட விடாமல் செய்வோம் என்று பாமகவினர் தெரிவித்தனர். அப்போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரினார்கள். ஆனால் ரஜினி தெடர் மவுனியாகவே இருந்தார். பாபாவும் படு பிளாப்பானது. அந்த நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசினார். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று நேரடியாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழ் திரையுலகமே கர்நாடகாவை கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தினர். அதில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத மேடையில் பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அந்த நேரத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழ் தியேட்டர்கள் நொறுக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய ரஜினி, கலவரத்தை உண்டு பண்ணுகிறவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசமாக பேசினார். (பிறகு அதற்கு மன்னிப்பு கேட்டது தனி கதை).
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரம் அமைக்கும் கூட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில்தான் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008-09-10
அஜித்தின் ஏகன் ரீலிஸ் தேதி அறிவிப்பு
இதைத்தொடர்ந்து ஏகன் படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அக்டோபர் 10 அல்லது 11ம் தேதியில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக டைரக்டர் ராஜூசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த படம் இந்தியில் ஷாருக்கான் நடித்த மெய்ன் ஹூன் னா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் வில்லு படம் தள்ளிப்போகும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
எந்திரன் ரோபோவுக்கு டைட் செக்யூரிட்டி
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய். சிவாஜி படத்தின்போதே ஐஸ்வர்யா ராயை நாயகியாக திட்டமிட்டனர். ஆனால் இப்போது அந்த முயற்சி நிறைவேறியதைத் தொடர்ந்து எந்திரன் விளம்பரங்களில் ரஜினிக்கு இணையாக ஐஸ்வர்யா ராய் பெயரை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் ஷங்கர். இதற்கு காரணம் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகுக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதுதானாம். தென் அமெரிக்காவில் எந்திரன் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் படத்தில் இடம்பெறும் ரோபோ ஸ்டில்கள் கசியாமல் பாதுகாக்க டைட் செக்யூரிட்டி வேலைகளை செய்துள்ளார்களாம்.
எந்திரன் படத்தை தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள ஷங்கர் ஆங்கிலத்திலும் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்பது கொசுறு தகவல்.
2008-09-09
நயன்தாராவை வீழ்த்த துடிக்கும் 2 நாயகிகள்
இந்நிலையில் மர்மயோகியில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மர்மயோகி தரப்பு உறுதிபடுத்தவில்லையென்றாலும், ஸ்ரேயா தரப்பு உறுதிபடுத்தியிருக்கிறது. சிவாஜி நாயகியான இவரும் நயன்தாரா மீது கடும் காட்டத்தில் இருந்து வருகிறார்.
த்ரிஷாவும், ஸ்ரேயாவும் இணைந்து நயன்தாராவை வீழ்த்த முயற்சிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பேச்சு எழுந்து விட்டது. ஆனால் நயன்தாராவோ இதனை கண்டு கொள்ளவே இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி, இல்லையென்றால் எனது நடிப்புத் திறனால் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்வேன் என்கிறார் அவர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கவர்ச்சியை விரும்பும் நடிகை
விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் ஜோடி போட்டு கெட்ட ஆட்டம் ஆடிய ஷெரில் பிண்டோ இப்போது அதே விஜயகாந்துடன் எங்கள் ஆசான் படத்தில் குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து ஷெரில் பிண்டோ நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை பொறுத்த வரை கவர்ச்சியாக நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. ஹோம்லி கேரக்டரில் நடிப்பது ரொம்ப கஷ்டம். குறைந்த உடை, எக்கச்சக்க கவர்ச்சி, லிப் டு லிப் முத்தக் காட்சி எதுவானாலும் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் இழுத்து போர்த்திக்கொண்டு நடிப்பைக் காட்டச் சொன்னால் எனக்கு அதைவிடக் கஷ்டம் வேறில்லை. நான் கிளாமரான உடல்வாகு கொண்டவள். அதனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருக்கிறது.
ஆனால் எங்கள் ஆசான் படத்தில் வேறு வழியில்லாமல் அடக்கமான பெண்ணாக நடிக்கிறேன். இந்த படத்தை தொடர்ந்து சுந்தர்சியுடன் வாடா படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்தில் எனக்கு ஏற்ற, எனக்கு பிடித்த கவர்ச்சியாக நடிக்கிறேன். படத்தில் ஒரு முத்த காட்சியோ, நீச்சல் உடையோ கொடுங்கள் என்று இயக்குனரை கேட்டிருக்கிறேன். தந்தால் சந்தோஷம். கிளாமர் என்பது இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகி விட்டது அல்லவா?
இவ்வாறு ஷெரில் பிண்டோ கூறினார்.
பிராமண சமூகத்தை அசிங்கப்படுத்துகிறதா தனம்?
டைரக்டர் ஜி.சிவா இயக்கத்தில் உருவாகி, வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் தனம். இந்த படத்தில் நடிகை சங்கீதா விபச்சாரியாக நடித்திருக்கிறார். விபசாரம் செய்யும் பெண்கள், கஸ்டமர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்களோ... அதை அச்சு அசலாக அசத்தலாக நடிப்பில் வெளிக்காட்டியிருக்கிறார் சங்கீதா. இதனால் இந்த படத்துக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. படத்தின் கதைப்படி நாயகியான தாசி சங்கீதாவை, பிரமாண சமூகத்தை சேர்ந்த ஹீரோ காதலிக்கிறார். ரூ.500 கொடுத்தாலே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தயார் என்று சொல்லும் விபச்சார பெண்ணிற்கு தனது காதலை புரியவைத்து, அவர் போடும் கண்டிஷனையும் ஏற்று சங்கீதாவை அக்ரஹாரத்து மருமகளாக்குகிறார். அதன் பின்னர் ஜோதிடத்தை நம்பி சங்கீதாவின் குழந்தையை கொல்வது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதுபோல இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி படத்தின் டைரக்டர் சிவாவிடம் கேட்டபோது, தனம் என்பது ஒரு சினிமாதான். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். சினிமாவை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது? தனம் படம் வெளியான பின்னர் முகம் தெரியாத நபர்களெல்லாம் தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள், என்றார்.
தனம் படத்தில் உண்மையிலேயே பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்துகிறார்களா? வாசக நண்பர்களே... பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.
2008-09-08
கல்யாணத்துக்கு பிறகு பூமிகாவின் கூடுதல் அசத்தல்
நடிகர்கள் 60 வயதை எட்டினாலும் நாயகனாக நடிக்க வாய்ப்புகள் வாயில் கதவை தட்டிக் கொண்டிருக்கும். ஆனால் நடிகைகளைப் பொறுத்த வரை கல்யாணம் முடிந்து விட்டால் அவ்வளவுதான். வாய்ப்புகள் கிடைப்பதே அரிது. அதிலும் கதாநாயகி வாய்ப்புக்கு நோ சான்ஸ். அதனால்தான் பல நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறார்கள்.
ஆனால் நடிகை பூமிகா விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. கல்யாணத்துக்கு பிறகு பூமிகாவுக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்துள்ளன. இதனால் பிஸியில் குஷியாக இருக்கிறார் பூமிகா. தெலுங்கில் சம¦பத்தில் பூமிகா நடித்து வெளியான அனுசுயா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் மல்லேபுவு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வேறு சில படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தமிழிலும் ஸ்ரீகாந்துடன் மா படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குசேலனையும், ரோபோவையும் சம்பந்தப்படுத்தாதீர்கள் : ஷங்கர்
குசேலன் தோல்வியையும், எந்திரனாக உருவாகவிருக்கும் ரோபோ படத்தையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார். மும்பையில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ரோபோ படம் எந்திரன் என்ற பெயரில் எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியில் உருவாகும் என்பதில் ஐயமில்லை. ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் தோல்வியடைந்ததால் ரோபோ படத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சிலர் பேசுகிறார்கள். அப்படி எதுவும் நடக்காது. குசேலன் நல்ல படம்தான். தேவையற்ற சில சர்ச்சைகள் உருவாகி விட்டது.
ரோபோ படம் சிவாஜி படத்தை விட பல மடங்கு தொழில்நுட்ப யுத்திகளுடன் உருவாகிறது. அமெரிக்காவில் தமிழ் சினிமா மட்டுமல்ல வேறு எந்த மொழி சினிமாக்களும் கண்டிராத லொக்கேஷன்களில் சூட்டிங்கை நடத்தவிருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை எங்கள் எந்திரன் கண்டிப்பாக தருவான், என்று கூறியுள்ளார்.
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் புது கொள்கை
வீடு தேடி வருபவர்களுக்கு மட்டுமே நடித்து கொடுப்பது என்ற கொள்கையை வைத்திருந்த ஷகீலா, இப்போது புது கொள்கையை வகுத்திருக்கிறாராம். விஜய்யின் தீவிர ரசிகையான இவருக்கு வயதாகி விட்டதால் மலையாளத்தில் மார்க்கெட் குறைந்து விட்டது. இதனால் தான் கவர்ச்சியாக நடித்து சம்பாதித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த ஷகீலா, இப்போது மலையாள படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இதனையறிந்த கோலிவுட்காரர்கள் ஷகீலாவின் வீட்டுப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.
இதனால் வீட்டுப்பக்கம் வருபவர்களுக்கு மட்டுமே நடித்து கொடுப்பது என்ற கொள்கையை வைத்திருந்த ஷகீலா, இப்போது புது கொள்கையை வகுத்திருக்கிறாராம். படத்தின் ஹீரோவுடன் சேர்ந்து ஒன்றிரண்டு காட்சிகளிலாவது நடிக்க வாய்ப்பு தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறாராம். இதன் காரணமாகத்தான் சமீபத்தில் அஜித் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஷகீலா மறுத்தாராம்.
2008-09-02
சுப்பிரமணியபுரம் சுவாதி (Without Makeup) லேட்டஸ்ட் கேலரி
ரோபோ சூட்டிங்கிற்கு ரஜினி தயார்
பிரேசிலில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான வானுயர்ந்த இயேசு சிலையில் படத்தை ஆரம்பித்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த சூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்க முடிவு செய்திருக்கிறாராம்.
சூர்யா, கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா
பருத்திவீரன் கார்த்தி, டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், அண்ணன் சூர்யா நடிக்கவுள்ள கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இந்த படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
2008-09-01
பந்தயக்கோழி - முன்னோட்டம்
இப்படத்தில், தாய்க்கும், மகனுக்குமான பாசத்தையும், தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கடமையையும் ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் எம்.ஏ.வேணு. இவரது கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு வசனங்களை எழுதியிருப்பவர் பி.ஆர்.சந்துரு. அலெக்ஸ்பால் இசை அமைக்க, கவிஞர் ஜெயந்தா பாடல்களை எழுதியுள்ளார். வேணுகோபால் ஒளிப்பதிவு செய்ய, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்திற்காக அண்மையில் பிரசன்னா, ராகுல் நம்பியார், நவீன், பின்னி கிருஷ்ணமூர்த்தி, சைந்தவி ஆகியோர் பாடிய பாடல்கள் பதிவானது. அப்பாடல்கள் கேட்க ரொம்பவும் இனிமையாக இருந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வந்து வெற்றிவாகை சூடும் என்கிறார் இயக்குனர் எம்.ஏ.வேணு.
வைஜெயந்தி ஐபிஸ் ரீமேக்கில் சினேகா
இப்போது, இப்படத்தை சவுண்ட் பார்ட்டி படத்தின் இயக்குனர் ஆர்த்தி குமார் ரீ-மேக் செய்யவுள்ளார். விஜயசாந்தியின் காக்கி உடையை இதில் அணியப் போகிறவர் நடிகை சினேகா.
சினேகா துப்பாக்கி தூக்கினால் எடுபடுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே நேரம் அதே இடம் - முன்னோட்டம்
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் எம்.பிரபு. வசனங்களை லலிதானந்த் எழுத, பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நா.முத்துகுமார் பாடல்களை எழுத, சுந்தரம் நடனங்களை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்க, வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் எம்.பிரபு கூறுகையில், படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர் ஜெய். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர் விஜயலட்சுமி. இவர்களுக்குள் ஏற்படும் காதல், கதாநாயகன் ஜெய் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை படு யதார்த்தமாகச் சொல்லும் கதை இது. முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாக, எல்லோரது நெஞ்சங்களையும் தொடும் விதமாக இப்படத்தை படமாக்கி வருகிறேன், என்றார்.
த்ரிஷா நழுவ விட்ட வாய்ப்பை தட்டிப்பறித்த தமன்னா
இந்நிலையில் த்ரிஷா நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பை நடிகை தமன்னா தட்டிப் பறித்துள்ளார். கதையை கேட்டதும் ஓ.கே. சொன்ன தமன்னா, அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டாராம். தற்போது தமன்னா நடித்து வரும் ஆனந்த தாண்டவம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூர்யாவுடன் நடிக்கும் அயன் படத்துக்கான சூட்டிங்கும் வேகமாக நடந்து வருகிறது. இந்த படங்களை முடித்ததும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
2008-08-31
பிகினி உடை தரிசனத்துக்கு நயன்தாரா தரும் ஐடியா : ஸ்பெஷல் பேட்டி
ஐயா படத்தில் பாவாடை, தாவணியுடன் அறிமுகமாகி, சந்திரமுகியில் சேலை கட்டி, பில்லாவில் நீச்சல் உடையணிந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நயன்தாரா இன்று குசேலன் படத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு வெளுத்து கட்டியுள்ளார். சத்யம் படத்தில் சென்சாரின் கத்தரிக்கு பலியான காட்சிகளைத் தவிர வெட்டுபடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும் நயன்தாராவின் தாராள மனசுக்கு உதாரணம். பாவாடை தாவணியில் நடித்த நயன்தாரா, நீச்சல் உடையில் நடித்ததால் ரசிகர்களுக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இதுபற்றி அவர் என்ன நினைக்கிறார். அவரிடமே கேட்டோம். இதோ நயன்தாராவின் பேட்டி... உங்களுக்காக...!
பில்லா படத்தில் டூ-பீஸ் பிகினி டிரெஸ்ஸில் வந்தது பற்றி...?
இதே கேள்விக்கு இன்னும் எத்தனை தடவைதான் பதில் சொல்லப்போகிறேனோ தெரியவில்லை. படம் ரிலீசாகி கொஞ்சநாள் வரை இதை புகாராகவே நிறைய பேர் கூறி வந்தார்கள். ஆனால் எனது அந்த தோற்றம் நிறைய பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது. டூ-பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது பற்றி எனக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் எழவில்லை. காரணம் அதில் நான் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பேன் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. இது பிகினி டிரெஸ்சுக்கு மட்டுமல்ல, பாவாடை, தாவணி, சேலை, ஜீன்ஸ்... வகையறாக்களில் வந்தாலும்கூட நாம் அதுக்கு பொருந்துவோம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால் அதுக்கு பொருத்தமான உடல்வாகும் தேவை. அது எனக்கு இருப்பதாகவே நினைக்கிறேன். பில்லா' பட யூனிட்டினர், சங்கோஜமாக இருந்தால் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து கொள்ளலாம்' என்றுகூட என்னிடம் கூறியிருந்தார்கள். ஆனால் இது எனக்கு அழகாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் டூ-பீஸில் வந்தேன்.
அடுத்து ஏதாவது படத்தில் டூபீஸ் தரிசனம் கிடைக்குமா?
ஒரு தடவை செஞ்சாச்சு. அதை ரசிகர்களும் ரசித்து மகிழ்ந்தாச்சு. மீண்டும் மீண்டும் அதையே எல்லா படத்திலும் தொடர்ந்தால் அதில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது? படத்துக்குப் படம் புதுசான காட்சிகள், காஸ்ட்யூம்கள், பாடல்கள், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ், நடிப்பு என்று இருந்தால்தானே ரசிக்க முடியும்? அதுபோலதான் சில ஸ்பெஷல் தோற்றங்களும்! டூ-பீஸில் அதாவது பிகினியில் என்னை பார்க்கணும்னா பில்லாவை திரும்பத் திரும்ப பார்த்துக்கோங்க.
ஏகன் படம் பற்றி...?
ஏகன் படத்தோட டைரக்டர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் அல்லவா? அப்புறம் டான்ஸ், டூயட் சூப்பரா இருக்காதா? ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பத்து செட்டிங்ஸ் போட்டிருக்காங்க. அதில் காலேஜ் கலாச்சார விழா, திடீரென கனவு லோகமாக மாறி அஜித்தும் நானும் டூயட் பாடுறோம். படத்துல காலேஜ் லெக்சரர் ரோல் என்னோடது. படத்தின் பெரும்பகுதி ஏற்காடில் உள்ள நிஜ பள்ளிக்கூடம் ஒன்றில் அதன் கோடைகால விடுமுறை காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சுஹாசினி, சுமன், நவதீப், பியா (மும்பை மாடல்) ஆகியோரும் நடித்துள்ளனர். தீவிரவாதியாக அஜித் சூப்பர் கெட்-அப்பில் வருகிறார். படம் முழுக்க அமர்க்களமாக இருக்கும். ரொம்பவே என்ஜாய் பண்ணுவீங்க. யுவன்சங்கர் ராஜாவோட இசையும் சூப்பரா வந்திருக்கு.
குசேலன் படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது பற்றி?
அது வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். ரஜினி சாருடன் இணைந்து நடித்துள்ள மூன்றாவது படம் குசேலன். படம் வெளியாகி நல்லா போய்கிட்டிருக்கு. ரொம்பவும் ஹேப்பியா இருக்கேன். ரஜினி சாரை பற்றி சொல்லணும்னா, அவருக்கும் எனக்கும் வயதில் நிறைய வித்தியாசம் இருக்கு என்றாலும், அவருடன் நடிக்கும்போது நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் இப்போதுள்ள இளைஞர்களைவிட அவர் பல விஷயங்களில் இன்னும் இளமையுடனும், துள்ளலுடனும், உற்சாகத்துடனும்தான் இருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
உங்களைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருகின்றனவே?
நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் குடும்பத்தோடு அமைதியா வாழ்கிறேன். சிலர் தேவையில்லாமல் என்னைப் பற்றி முரண்பாடான விஷயங்களை செய்திகளாகச் சித்தரித்து என் மீது திணிக்கிறார்கள். அது எவ்வளவு காலம் எடுபடப் போகிறது? கொஞ்ச காலத்திற்கு பிறகு எனது வேலைகள்தான் பேசப்படும், இதுபோன்ற வதந்திகள் அல்ல!
இவ்வாறு நயன்தாரா கூறினார்.