லட்சுமி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரிக்கும் படம் அதே நேரம் அதே இடம். இப்படத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஜெய் கதாநாயகனாக நடிக்க, சென்னை-28, அஞ்சாதே படங்களில் நடித்த விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா ஜீவா, நிழல்கள் ரவி, நித்யா, ரவிபிரகாஷ், மும்பை வில்லன் ராகுல் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் எம்.பிரபு. வசனங்களை லலிதானந்த் எழுத, பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நா.முத்துகுமார் பாடல்களை எழுத, சுந்தரம் நடனங்களை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்க, வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் எம்.பிரபு கூறுகையில், படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர் ஜெய். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர் விஜயலட்சுமி. இவர்களுக்குள் ஏற்படும் காதல், கதாநாயகன் ஜெய் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை படு யதார்த்தமாகச் சொல்லும் கதை இது. முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாக, எல்லோரது நெஞ்சங்களையும் தொடும் விதமாக இப்படத்தை படமாக்கி வருகிறேன், என்றார்.
2008-09-01
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!