ப்யூச்சர் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜே.பி.குமார் தயாரித்துள்ள படம் பந்தயக் கோழி. இப்படத்தில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த நரேன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். இவர்களுடன் லால், ஹனீபா, ராமிரெட்டி, போஸ் வெங்கட், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில், தாய்க்கும், மகனுக்குமான பாசத்தையும், தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கடமையையும் ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் எம்.ஏ.வேணு. இவரது கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு வசனங்களை எழுதியிருப்பவர் பி.ஆர்.சந்துரு. அலெக்ஸ்பால் இசை அமைக்க, கவிஞர் ஜெயந்தா பாடல்களை எழுதியுள்ளார். வேணுகோபால் ஒளிப்பதிவு செய்ய, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்திற்காக அண்மையில் பிரசன்னா, ராகுல் நம்பியார், நவீன், பின்னி கிருஷ்ணமூர்த்தி, சைந்தவி ஆகியோர் பாடிய பாடல்கள் பதிவானது. அப்பாடல்கள் கேட்க ரொம்பவும் இனிமையாக இருந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வந்து வெற்றிவாகை சூடும் என்கிறார் இயக்குனர் எம்.ஏ.வேணு.
2008-09-01
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!