CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-09-10

எந்திரன் ரோபோவுக்கு டைட் செக்யூரிட்டி

குசேலன் படம் வெற்றியா, தோல்வியா என்று சில தரப்பினர் அலசி ஆராய்ந்து வரும் சூழலில் அடுத்த படத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜி வெற்றி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ரோபோவாக உருவாகவிருந்த படம் இப்போ எந்திரன் ஆகியிருக்கிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய். சிவாஜி படத்தின்போதே ஐஸ்வர்யா ராயை நாயகியாக திட்டமிட்டனர். ஆனால் இப்போது அந்த முயற்சி நிறைவேறியதைத் தொடர்ந்து எந்திரன் விளம்பரங்களில் ரஜினிக்கு இணையாக ஐஸ்வர்யா ராய் பெயரை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் ஷங்கர். இதற்கு காரணம் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகுக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதுதானாம். தென் அமெரிக்காவில் எந்திரன் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் படத்தில் இடம்பெறும் ரோபோ ஸ்டில்கள் கசியாமல் பாதுகாக்க டைட் செக்யூரிட்டி வேலைகளை செய்துள்ளார்களாம்.

எந்திரன் படத்தை தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள ஷங்கர் ஆங்கிலத்திலும் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்பது கொசுறு தகவல்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!