தசாவதாரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படம் மர்மயோகி. இந்த படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நாயகி தேர்வு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. கமல்ஹாசன்தான் நாயகி வேட்டையில் இறங்கியிருக்கிறார். மிருகம் படத்தில் பத்மப்ரியா காட்டிய நடிப்புத்திறமையை பார்த்து வியந்த கமல்ஹாசன் அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர் மறுத்து விட்டார். இதனைத்தொடர்ந்து த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. ரொம்பவே யோசித்த அவர் கமலுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். (ஏற்கனவே நயன்தாரா சூப்பர் ஸ்டாரில் தொடங்கி இளைய தளபதி வரை ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்).
இந்நிலையில் மர்மயோகியில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மர்மயோகி தரப்பு உறுதிபடுத்தவில்லையென்றாலும், ஸ்ரேயா தரப்பு உறுதிபடுத்தியிருக்கிறது. சிவாஜி நாயகியான இவரும் நயன்தாரா மீது கடும் காட்டத்தில் இருந்து வருகிறார்.
த்ரிஷாவும், ஸ்ரேயாவும் இணைந்து நயன்தாராவை வீழ்த்த முயற்சிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பேச்சு எழுந்து விட்டது. ஆனால் நயன்தாராவோ இதனை கண்டு கொள்ளவே இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி, இல்லையென்றால் எனது நடிப்புத் திறனால் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்வேன் என்கிறார் அவர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2008-09-09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!