த்ரிஷா நழுவ விட்ட வாய்ப்பை நடிகை தமன்னா தட்டிப்பறித்துள்ளார். இந்தியில் கரீனா கபூர், ஷாஹித் கபூர் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படம் ஜப் வி மெட். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிகர் பரத் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை கேட்டார்கள். ஆனால் அவர் பரத்துடன் ஜோடி போட முடியாது என்று மறுத்து விட்டார்.
இந்நிலையில் த்ரிஷா நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பை நடிகை தமன்னா தட்டிப் பறித்துள்ளார். கதையை கேட்டதும் ஓ.கே. சொன்ன தமன்னா, அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டாராம். தற்போது தமன்னா நடித்து வரும் ஆனந்த தாண்டவம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூர்யாவுடன் நடிக்கும் அயன் படத்துக்கான சூட்டிங்கும் வேகமாக நடந்து வருகிறது. இந்த படங்களை முடித்ததும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
2008-09-01
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!