
உளியின் ஓசை படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை வாரி குவித்து வருகிறது. இதனால் முதல்வர் கருணாநிதி ரொம்பவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். படத்தின் டைரக்டர் இளவேனில், நடிகர் வினித், நடிகைகள் கீர்த்தி சாவ்லா, அக்ஷயா உள்ளிட்டோரை போனில் அழைத்து மீண்டும் ஒரு பாராட்டு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் கலைஞரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் என்ற நாவல்தான் படமாகிறது. இந்த புதிய படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார். கல்யாண சர்ச்சை முடிந்து கலகலப்பாகியுள்ள பிரசாந்த் இந்த படத்தில் பொன்னர், சங்கர் ஆகிய 2 வேடங்களில் நடிப்பார என்று படத்தை இயக்கும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்தார். பொன்னர் செல்வன் கதையில் போர்க்கள காட்சிகள்தான் முக்கியத்துவம் பெற்றவையாம். இதற்காக வெளிநாட்டு கிராபிக்ஸ் யுத்தியை பயன்படுத்தவிருக்கிறோம் என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு பிரசாந்தை தேர்வு செய்தது கலைஞர்தான் என்பது கொசுறு தகவல்.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!