
நடிகை ரேவதியை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள், அவரது நடிப்பில் வெற்றிப்படங்கள் ஏராளம். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரேவதி ஒரு படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் வண்ணத்துப்பூச்சி. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரேவதிக்கு முக்கியமான கேரக்டராம். குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுக்காக எடுக்கப்படும் படத்தில் நடிப்பதே மகிழ்ச்சியான விஷயம். எனவே இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
இதனால் சந்தோஷமாக படத்தை எடுத்து முடித்துள்ளனர். இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. நடிகை ரேவதி சம்பளம் வாங்காமல் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார்.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!