
நடிகர் அர்ஜூனும், டைரக்டர் பேரரசும் திருவண்ணாமலையில் சண்டை போட்டுக் கொண்ட செய்திதான் கோலிவுட்டில் ஹாட் டாக். சூட்டிங்கிற்கு அர்ஜுன் லேட்டாக வந்ததால் பேரரசு கடிந்து கொண்டதாக செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி விசாரிக்கையில், உண்மையான காரணம் அதுவல்ல என்று தெரியவந்துள்ளது.
டைரக்டர் பேரரசு தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு ஆக்ஷன், காதல், செண்டிமென்ட் கலந்த மசாலா படம் எடுக்கக்கூடியவர். பேரரசுவுடன் திருவண்ணாமலை படத்தில் இணைந்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேரரசுவின் ஆக்ஷன் காட்சிகளை விமர்சித்ததுடன், சண்டை விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தொடர்ந்து கூறி வருகிறாராம். ஆனால் இதனை ஏற்க மறுத்த பேரரசு, நான் சொல்வதை மட்டும் நடித்துக் கொடுங்கள் என்று கூறி விட்டார். இதனால் கோபமடைந்த அர்ஜுன், கடுப்பாகி தாமதமாக படப்பிடிப்புக்கு வரத் தொடங்கினார். இந்த பிரச்னைதான் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளதாம்.
என்னதான் இருந்தாலும் டைரக்டரின் வேலையை ஹீரோவே செய்யத்துடிப்பது கொஞ்சம் டூ மச் தானே?
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!