
மர்மயோகி படம் ஏழாம் நூற்றாண்டு கதையை கருவாக கொண்டது என்று உலக நாயகன் கமல்ஹசன் தெரிவித்துள்ளார்.
மர்மயோகி படம் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தசாவதாரம் படத்தை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். மக்களும் அதனை விரும்பி பார்த்து ரசித்து வருகிறார்கள். சில விமர்சகர்கள் மட்டும் படத்தை சாடியிருக்கிறார்கள், ஒரு படைப்பை தருவதுதான் எங்கள் வேலை. அதை நாங்கள் நன்றாகவே செய்துவிட்டோம். அந்த படைப்பை பார்ப்பதும், ரசிப்பதும், ஏற்பதும், ஏற்காததும் மக்கள் விருப்பம். இந்த படத்தில் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். விமர்சகர்களின் சில விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு படம் குறித்து விவாதம் நடந்தாலே அது நன்றாக மக்களிடம் போய் சென்று விட்டது என்று அர்த்தம். அந்த வகையில் விவாதங்களை நான் நல்ல விஷயமாகவே கருதுகிறேன்.
பொதுவாக எனது படங்களில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம் என்று சொல்லி வருகிறேன். இவ்வாறு சொல்வது ஏன் என சிலர் கேட்கிறார்கள். சுயநலவாதிகள் நிறைந்த உலகில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம்தான். அதையும் மீறி அவர்கள் முன்னேற வேண்டுமானால் மனதளவில் பலம் கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் சில கொள்கைகளை கடைப்பிடித்தபோது எனக்கும் பிரச்னை வந்தது. தைரியத்தால்தான் என¢னால் அதில் நிலைத்திருக்க முடிகிறது.
எனது அடுத்த படம் மர்மயோகியை தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. இது ஏழாம¢ நூற¢றாண்டு சரித்திர கதையாக உருவாகவிருக்கிறது. இதையும் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அதிக பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கப் போகிறோம். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) படப்பிடிப்பை தொடங்குகிறேன். அனைத்து வகை ரசிகர்களையும் கவர்வதுதான் இப்படத்தின் நோக்கமாக இருக்கும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
அடுத்த படத்துக்கான பில்ட் அப் ஆரம்பிச்சுருச்சு போல இருக்கே
//அடுத்த மாதம் (ஆகஸ்ட்) படப்பிடிப்பை தொடங்குகிறேன்//
ரோபோ VS மர்மயோகி சபாஷ் சரியான போட்டி
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!