
எனக்கு பிறகு பீல்டுக்கு வந்து, என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறார், விஜய்யிடம் இருந்து என்னை பிரித்து விட்டார்... அவரது இமேஜை எப்படியாவது டேமேஜ் செய்யணும் என்று நயன்தாராவை வசைபாடுவதிலேயே த்ரிஷாவின் பொழுதுகழிந்து வருகிறதாம்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு சென்னை தி பார்க் ஓட்டலில் சிம்பும், நயன்தாராவும் மீண்டும் சந்தித்து பேசிக் கொண்டதாகவும், இருவருக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி கோலிவுட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் போன் செய்து கேட்டுள்ளனர். சிம்பு... ஆமாம்.. நாங்க மறுபடியும் காதலிச்சா என்ன தப்பு? என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நயன்தாராவோ... எதார்த்தயாக நடந்த சந்திப்பு அது. எனக்கு சிம்பு மீது இனி காதல் வராது என்று சொல்லியிருக்கிறார். அப்போது சிலர், சிம்பு ஆமாம் என்கிறார்... நீங்கள் இல்லை என்கிறீர்களே... என்று கேட்டிருக்கிறார்கள்.
இதில் மனவேதனையடைந்த நயன்தாரா, உடனடியாக சிம்புவுக்கு போன் செய்து வறுத்தெடுத்து விட்டாராம். என்னடா இது... இப்படி வம்பாக போய்விட்டதே என்று சிம்பு பதறிக் கொண்டு த்ரிஷாவிடம் போன் செய்திருக்கிறார். போன் சுவீட்ச் ஆப். அதன் பிறகுதான் இது எல்லாமே த்ரிஷா வேலைதான் என்று தெரிந்தது. (த்ரிஷாதான் நயனுக்கும், சிம்புவுக்கும் போன் செய்து தி பார்க் ஓட்டலுக்கு வரச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது)
தன்னை விட அதிக சம்பளம் வாங்குகிறார், விஜய்யுடன் இருந்து பிரித்து விட்டார் போன்ற சில காரணங்களுக்காக நயன்தாரா இமேஜை டேமேஜ் செய்ய நினைத்திருந்த த்ரிஷாதான் இப்படி செய்திருக்கிறார் என் தெரியவந்தது. இதனால் சோகத்தில் இருக்கிறார் சிம்பு.
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
//நயன் இமேஜை டேமேஜ் செய்யணும் : த்ரிஷா சபதம்//
:-()
இதெல்லாம் என்ன பொழப்புன்னே தெரியல. தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க.....
//இதெல்லாம் என்ன பொழப்புன்னே தெரியல. தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க.....
//
செய்தி வெளியிட்ட சினிமா நிருபர் பொழைப்பச் சொல்றிங்களா.... அல்லது த்ரிஷா.. பொழப்பச் சொல்றீங்களா..
எனக்கென்னவோ இதெல்லாமே நிருபர்கள் எழுதும் மசாலாக்கள் தானெனத் தோணுது.. இதை வெச்சே.. இன்னும் 1 வாரம் த்ரிசா பேட்டி.. நயன் பேட்டி. சிம்பு பேட்டி..கலந்துரையாடல்.. "அவர் மனம் திறக்கிறார்".. "இவர் மனம் திறக்கிறார்" என்று ஒப்பேத்திட மாட்டாங்க?
Unka kitta vanthu sonnarakkum?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!