
படத்துக்கு தேவையெனில் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சிந்து துலானி கூறியுள்ளார்.
தமிழில் மன்மதன், மஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிந்து துலானி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். இப்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் பந்தையம் படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்.
புதிய தமிழ் படம் குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:&
பந்தயம் படத்தின் கதையை சந்திரசேகர் சார் சொன்னதுமே எனக்கு பிடித்து விட்டது. இதில் பெரிய தாதாவான பிரகாஷ் ராஜ¤ன் தங்கை கேரக்டர் எனக்கு. நான், பிரகாஷ் ராஜிடம் சண்டை போட்டு விட்டு அமெரிக்கா சென்று விடுகிறேன். அங்கு படித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புகிறேன். கல்லூரி படிப்பை சென்னையில் தொடரும்போது நிதின் சத்யாவை சந்திக்கிறேன். காதல் மலர்கிறது. பிரகாஷ் ராஜ் வேடம் அதற்கு பின் எப்படி மாறுகிறது, எங்கள் காதல் என்ன ஆகிறது பந்தயம் படத்தின் கதை.
இவ்வாறு சிந்து துலானி கூறினார்.
அதன் பின்னர் அவரிடர் நிருபர்கள், நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா என்று வழக்கமான கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிந்து துலானி, தெலுங்கு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் கிளாமராக நடித்தேன். ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் கூட நடித்திருக்கிறேன். கதைக்கு தேவையென்றால் தமிழிலும் அவ்வாறு நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் கவர்ச்சி இமேஜிலேயே காலத்தை கடத்த மாட்டேன், என்றார்.
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
athenna padukkai arai katchiyil nadikka... nadakkavennu solla vendiyathuthane.... :(
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!